உலகின் முதல் கேமராவா ?

பரவிய செய்தி
இது தான் உலகின் முதல் கேமரா உருவாக்கிய போது எடுத்த புகைப்படம் .ஆனால் எந்த கேமராவால் இதை பதிவு செய்தார்கள் .
மதிப்பீடு
சுருக்கம்
புரளியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா மக்களே!!!!. இது உலகின் முதல் கேமரா இல்லை . உலகின் மிகப்பெரிய கேமரா உருவாகியபோது எடுத்த படம்…
விளக்கம்
உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கேமராவின் படம் என்றுக் கூறி ஓரி படமானது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், இவை உலகின் முதல் கேமரா இல்லை, உலகின் மிகப்பெரிய கேமரா ஆகும்.
1900 ஆம் ஆண்டு சிகாகோ கேமரா கட்டமைப்பாளர் j.anderson என்பரது தொழிற்கூடத்தில் இருந்து 15 நபர்களின் மூலம் கேமராவின் பாகங்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு chicago&alton என்ற இடத்தில உள்ள புகைவண்டி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது . அதன் பிறகு 900lb கொண்ட கேமராவை கால் மைல் தொலைவில் திறந்த வெளியில் புதிய புகைவண்டியை பார்க்கும்படி கட்டமைத்தார் அதன் வடிவமைப்பாளர் ஆன george R Lawrence.
chicago&alton புகைவண்டி நிலையத்திருக்கு பெருமை சேர்க்க alton limited என்ற கம்பெனி lawrence மூலம் உலகின் மிகப்பெரிய கேமராவை குறைந்த செலவில் உருவாக்கினர் . இந்த கேமராவின் கண்ணாடி தகட்டின் அளவு 8*4 1|2 fit ஆகும் .
அவர் எடுத்த அந்த புகைவண்டியின் படம் புகைப்பட வரலாற்றில் ஓர் மிகப்பெரிய சாதனை ஆகும். உலகின் மிகப்பெரிய கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் உலகின் மிகவும் அழகான புகைப்படம் ஆகும் .