ஊழலில் எந்த மாநிலம் முதல் மற்றும் கடைசி இடம் ?

பரவிய செய்தி
இந்தியாவில் ஊழல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா முதல் இடத்தை பிடித்துள்ளது. ஹிமாசலப்பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்கள் பட்டியலின் இறுதி இடங்களில் உள்ளன.
மதிப்பீடு
சுருக்கம்
20 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிகம் ஊழல் நடைபெறும் பட்டியலில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
விளக்கம்
இந்தியளவில் அதிக ஊழல்கள் நடைபெறும் மாநிலங்கள் பற்றி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தென்னிந்தியாவை சேர்ந்த கர்நாடக மாநிலம் முதல் இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலங்களில் நிகழும் ஊழல்கள் பற்றி CMS ( centre for media studies ) தலைமையில் நடந்த கருத்துக்கணிப்பை பற்றிடைம்ஸ் ஆப் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் 3௦௦௦ க்கும் மேற்பட்ட மக்களிடம் CMS கருத்துக்கணிப்பை நிகழ்த்தியது. அதில், கடந்தாண்டில் பணமதிப்பிலக்கத்தை தொடர்ந்து நாட்டின் சில பகுதியில் ஊழல், லஞ்சங்களின் சராசரி வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிகழ்வு கருப்பு பண விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை.
2016 ஆம் ஆண்டில் 20 மாநிலங்களிலும், 10 பொதுசேவை மையங்களிலும் வழங்கப்பட்ட லஞ்சப்பணம் ரூபாய் 6350 கோடியாகும். இது 2005 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட லஞ்சமான ரூபாய் 20,500 கோடிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆக குறைந்துள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. சில மாநிலங்கள் நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக பீகார், சத்தீஷ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் ஊழல்கள் முன்பிருந்ததைவிட குறைந்துள்ளது. ஹிமாசலப்பிரதேசம் 3 புள்ளிகளையும் மற்றும் கேரளா 4 புள்ளிகளையும் பெற்று பட்டியலில் இறுதியாக உள்ளன. அந்த அளவிற்கு அந்த மாநிலங்களில் அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர். ஆனால் கர்நாடகா மாநிலம் 77 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இம்மாநிலத்தில் ஊழலானது 2005 ஆம் ஆண்டை ஓப்பிடும் போது 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் ஆந்திரா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளன.
ஊழல்கள் நிறைந்த மாநிலங்கள் பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த மாநிலங்களே அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளன. இங்கு ஊழல், லஞ்சமானது அதிகரித்த வண்ணமே உள்ளன என்பதை இக்கருத்துக்கணிப்பு மூலம் அறியலாம்.