ஊழல் பட்டியலில் DMK க்கு நான்காவது இடமா ?

பரவிய செய்தி
உலகிலேயே அதிக ஊழல் செய்த அரசியல் கட்சிகளின் பட்டியலை fox செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது .
மதிப்பீடு
சுருக்கம்
fox செய்தி நிறுவனத்தின் பெயரில் போட்டோஷாப் மூலமாக இந்த பட்டியலை தயார் செய்துள்ளனர்.
விளக்கம்
அண்மையில் fox செய்தி நிறுவனத்தால் உலகிலேயே அதிக ஊழல் செய்து முதல் பத்து இடங்களை பிடித்த அரசியல் கட்சிகளின் பட்டியலை வெளியிடப்பட்டது எனக் கூறி சில படங்கள் வலைதளங்களில் பரவலாக காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே உலகில் அதிகம் ஊழல்கள் செய்த கட்சிகளின் பட்டியலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டதாகவும் , அதில் இந்திய தேசிய காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது என்ற செய்தியும் , படங்களும் வலைதளங்களில் அதிகமாக பரவியது .
BBC ஆல் வெளியிடப்பட்டதாக கூறி பரவிய செய்தியில் கட்சிகளின் பட்டியல் கீழ்வருமாறு அமைந்திருந்தது .
- Pakistan Muslim League Nawaz PML(N)-Pakistan
- National Resistance Movement-Uganda
- Progressive Action Party-Cuba
- Indian National congress-India
- Vietnam’s Communist Party- Vietnam
- Kuomintang-China
- Nationalist fascist party-Italy
- Nazi party-Germany
- Communist Party of China-China
- Communist Party of the soviet union-Russia
இணையங்களில் இந்த பட்டியலின் படங்கள் அதிகம் பகிரப்பட்டதால் பலர் உண்மை என்று நினைத்துள்ளனர். குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நான்காம் இடத்தில் இருந்தது அனைவரையும் விவாதத்திற்கு உள்ளாகியது. ஆனால் இதுபோன்ற எந்த ஒரு பட்டியலையும் வெளியிடவில்லை என்று bbc அறிவித்தது .
ஏற்கனவே பரவிய தவறான செய்திகளின் பட்டியலில் இந்திய தேசிய காங்கிரஸ்க்கு பதிலாக திராவிட முன்னேற்ற கழகத்தின்பெயரை சேர்த்துள்ளனர். போட்டோஷாப்பை கூட பல பிழைகளுடன் செய்துள்ளனர். ஆறாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில உள்ள இரண்டு கட்சிகளும் ஒரே நாட்டை சேர்ந்தவை. ஆனால் இரண்டிற்கும் வெவ்வேறு தேசிய கொடிகளை காண்பித்துள்ளனர். மேலும், fox செய்தி நிறுவனத்தின் வலைத்தளத்தில் இது தொடர்பாக எந்தவித செய்திகளும் இல்லை.
உலகில் உள்ள பல நாடுகளில் ஊழல்கள் செய்யும் கட்சிகள் இருப்பது உண்மையே என்றாலும், அதிகம் ஊழல்கள் நடைபெறும் பட்டியலில் நாட்டின் பெயரையே முன்னிறுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.