எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு.

பரவிய செய்தி

உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலின் போது ஓட்டு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பிஜேபி-யின் தாமரை சின்னத்தில் ஓட்டு விழுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

ஓட்டு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பிஜேபி-யின் தாமரையில் லைட் எரிவதாக மக்கள் அளித்தப் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட வாக்குசாவடியில் உள்ள ஓட்டு எந்திரத்தை சோத்தித்து பழுதடைந்த இயந்திரத்தை மாற்றி வாக்குப்பதிவை தொடர்ந்துள்ளனர்.

விளக்கம்

உத்திரப்பிரதேசத்தின் மீரட் மற்றும் கான்பூர் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலானது சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. அத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரமானது பாரதீய ஜனதா கட்சிக்கு சாதகமாக மாற்றப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் (BSP) சின்னத்தில் அழுத்தினால் பாரதீய ஜனதா கட்சியின் (BJP) சின்னத்தில் லைட் எரிவதை அப்பகுதியைச் சேர்ந்த ஊடக நபர் செல்போன் மூலம் வீடியோவாக எடுத்துள்ளார். அத்தகைய வீடியோ பதிவானது சமூக வலைதளங்களில் வைராகியது. அதே நேரத்தில் NOTA-விற்கு வாக்கு செலுத்தினாலும் அந்த வாக்கு பிஜேபி-க்கு விழுந்தது.

இதனால் வாக்கு இயந்திரங்களில் தவறுகள் நடந்த கான்பூர் வாக்குச்சாவடியில் இருந்த வேட்பாளர்கள் மற்றும் மக்கள் கோபமடைந்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையம் பிஜேபி-க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.

வாக்குச்சாவடியில் ஏற்பட்ட பதற்றத்தை அங்கிருந்த போலீசார் கட்டுப்படுத்தினர். பின்னர் தவறுகள் நடந்ததாகக் கூறிய வாக்குச்சாவடிகளில் இருந்த பழுதடைந்த வாக்கு இயந்திரங்களை மாற்றி வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் நரேந்திர மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக, உத்திரப்பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெற்ற முறைகேடு பற்றி முன்னாள் முதல்வர் மாயாவதி அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியான பிஜேபி-க்கு மாநில தேர்தல் ஆணையம் இடைத் தரகர்கள் போன்று செயல்படுவதாக கூறிய குற்றச்சாட்டை அம்மாநில தேர்தல் ஆணையர் மறுத்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து தேர்தல் ஆணையர் எஸ்.கே.அகர்வால் கூறுகையில், சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ பதிவை நன்றாகப் பார்த்தால், அதில் ஒரே நேரத்தில் இரண்டு லைட் எரிவது தெரியும். எனவே, இது இயந்திரத்தில் ஏற்பட்ட தவறுகள் தான் என்று அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button