This article is from Nov 16, 2017

ஏ.டி.எம் எண்ணை தலைகீழாக அழுத்தினால் போலீஸ் வருமா ?

பரவிய செய்தி

ஏ.டி.எம் கருவிகளில் பணம் எடுக்கும் போது கொள்ளையர்கள் உங்களை மிரட்டி பணம் எடுக்க சொன்னால் உங்களின் ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண்ணை தலைகீழாக அழுத்தவும் . இவ்வாறு செய்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ் வந்து விடும் .

மதிப்பீடு

சுருக்கம்

ஏ.டி.எம் எண்களை தலைகீழாக பயன்படுத்தினால் போலீஸ் வரும் என்ற செய்திகள் அனைத்தும் கட்டுக்கதைகளே என்று வங்கிகள் கூறியுள்ளது .

விளக்கம்

  வங்கிகளுக்கு சென்று நமக்கு தேவையான பணத்தை எடுக்கும் வேலையை எளிமையாக்க வந்தது தான் ஏ.டி.எம் கருவிகள் . ஆனால் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் கருவிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் குறைவு . அத்தகைய ஏ.டி.எம் கருவிகளில் பணம் எடுக்கும் போது கொள்ளையர்கள் வந்து உங்களை மிரட்டி பணம் எடுக்க சொன்னால் உங்களின் ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண்ணை தலைகீழாக அழுத்தவும் . இவ்வாறு செய்தால் அங்குள்ள பாதுகாப்பு கருவிகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு நீங்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ் வந்து விடும் . பல வருடங்களாக சமூக வலைதளங்கள் போன்ற இணைய தளங்களில் இவை போன்ற செய்திகள் அதிகமாக வலம் வருகிறது .

  இவை உண்மையா என்று அறிய பல மெயில்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது . இந்த யோசனை பயனுள்ளதாக இருந்தாலும் , நடைமுறையில் இது போன்ற எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் ஏற்படுத்தப்படவில்லை . ஏ.டி.எம் எண்களை தலைகீழாக பயன்படுத்துங்கள் என்று வரும் செய்திகள் அனைத்தும் கட்டுக்கதைகளே . மேலும் எந்தவொரு ஏ.டி.எம்களில் அவசர தலைகீழ் பின்தொழில்நுட்பம் பயன்படுத்தவில்லை என்றும் , மிகக்குறைந்த ஏ.டி.எம்களில் மட்டுமே எச்சரிக்கை பட்டன்கள் உள்ளன என்று , FTC யின் அறிக்கை கூறுகிறது .

  ஏ.டி.எம்களில் இரவில் பணம் எடுப்பதை தவிர்க்கவும் , ஆள்நடமாட்டம் இல்லாத ஏ.டி.எம்களில் பரிவர்த்தனை செய்ய வேண்டாம் . பணம் எடுக்கும் போது சுற்றியுள்ளவர்களை கண்காணிக்கவும் என்று பல அறிவுரைகளை வங்கிகள் வழங்குகின்றன .

  சமூக வலைதளங்களில் இச்செய்தி அதிகமாக பரவினாலும் பலர் இதை கேளிக்கையாக விமர்சித்து உள்ளனர் . உதாரணமாக , என்னுடைய ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண் 2992 என்று வைத்துக்கொண்டால் அதை தலைகீழாக அழுத்தினாலும் அதே எண் தானே வரும் என்று கேள்விகள்  எழுப்பியுள்ளனர் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader