This article is from Nov 11, 2017

ஒன்பது வங்கிகளை நிரந்தரமாக மூடப்போகிறார்களா ?

பரவிய செய்தி

ரிசர்வ் வங்கி ஒன்பது வங்கிகளை நிரந்தரமாக மூட உள்ளது . எனவே அந்தந்த வங்கி கணக்கில் உள்ள உங்கள் பணங்களை விரைவாக எடுத்து விடுங்கள் .

மதிப்பீடு

சுருக்கம்

 

விளக்கம்

   ரிசர்வ் வங்கி நிரந்தமாக மூட இருப்பதாக கூறிய அந்த ஒன்பது வங்கிகள் Corporation bank , UCO bank , IDBI , Bank of Maharasthra , Andhra bank , Indian overseas bank , Central bank of india , Dena bank , United bank of india .   வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவே ஓர் கட்டமைப்பு சார்ந்த செயலை செய்துள்ளனர் .

வங்கிகளை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். அவ்வாறு செய்வதால் வங்கிகளில் நடக்கும் தவறான பணப் பரிமாற்றம், கடன்கள் போன்ற முறை கேடுகளை ஒழுங்குப்படுத்தும் செயலாக இவை அமையும். அவ்வளவு எளிதாக அணைத்து வங்கிகளையும் நிரந்தரமாக மூட இயலாது .

அவ்வாறு நிரந்தரமாக மூடினால் அங்கு வேலைப்பார்ப்பவர்களின் நிலை என்னவாகும் . இதையெல்லாம் அறியாமல் தவறான செய்திகளை பரப்பி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றார்கள் .

இச்செய்தியை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மறுத்து உள்ளார் , இதுபோன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் உண்மையில்லை என்றும் , யாரும் இதை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளனர் . நாம் கேட்கும் பல செய்திகள் பொய்களும் , வதந்திகளுமே .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader