காஞ்சிபுரத்தில் பள்ளி பேருந்து விபத்தா ?

பரவிய செய்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள sskv என்ற பள்ளியின் பேருந்து விபத்துக்குள்ளாகி பல குழந்தைகள் இறந்துள்ளனர் . மேலும் உயிருக்கு போராடும் ஒரு குழந்தைக்கு AB-ve இரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது . இச்செய்தியை வேகமாக ஷேர் செய்தி உதவுங்கள் .

மதிப்பீடு

சுருக்கம்

இவை போன்ற வதந்திகளால் உண்மையான செய்திகளும் பாதிக்கப்படுகிறது . செய்திகள் உண்மையா என்று நன்கு அறிந்து பகிருங்கள் .

விளக்கம்

  தமிழ்நாட்டின் காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள sskv என்ற பள்ளியின் பேருந்து விபத்து ஆனதால் 35 குழந்தைகள் இறந்துள்ளனர் . மேலும் பல குழந்தைகள் உயிருக்கும் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர் . அதில் ஒரு குழந்தைக்கு உடனடியாக AB-ve இரத்தம் தேவைப்படுகிறது . இந்த தகவல் அனைவருக்கும் உடனடியாக பகிருங்கள் .

Advertisement

   குழந்தைகள் சென்ற பேருந்து விபத்தானது என்ற செய்தி பல வருடங்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இன்றளவும் மக்கள் பலர் உண்மை என்று நினைத்து பகிர்வு செய்து வருகிறார்கள் . இந்த செய்தியை பகிர்வு செய்தவர்கள் பலர் தங்களுக்கு தெரிந்து 2 , 4 , 6 வருடங்களாக இதே செய்தியை பார்ப்பதாகவும் , இந்த பதிவானது தொடர்ந்து பரவிக் கொண்டே வருகிறது என்றும் கூறினர் .

  இதில் உண்மை என்னவென்றால் அந்த பள்ளியில் இது போன்ற எந்த ஒரு விபத்தும் நிகழவில்லை என்று அப்பகுதியை சேர்ந்தவர்களும் , அப்பள்ளியை சேர்ந்தவர்களும் கூறியுள்ளனர் . அந்த பள்ளியில் பேருந்தே இல்லை என்றும் சிலர் கூறியுள்ளனர் . ஆனால் பல வருடங்களாக இந்த செய்தி அனைவராலும் பார்க்கப்படுவதை தவிர்க்க முடியவில்லை .

 இவ்வகையான வதந்திகளை சிலர் பரவச் செய்து சமூக வலைதளங்களில் விளம்பரங்களை தேடிக் கொள்கின்றனர் . உங்களிடம் கருணையை வெளிப்படுத்தக்கூடிய வதந்திகளை கூறினால் தான் எளிதாகப் பகிர்வீர்கள் என்று அறிந்து இவ்வாறான செயல்களை செய்கிறார்கள் . விளம்பரத்திற்கும் , பணத்திற்கும் இத்தகைய கீழ்தரமான செயல்களை சமூக வலைதளங்களில் சிலர் செய்வார்கள் . எனவே இது போன்ற செய்திகளை பார்த்தால் உண்மையா என்று அறிந்து பின்பு பகிருங்கள் .

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Advertisement
Please complete the required fields.
Back to top button