கிண்டர் ஜாய்க்கு அமெரிக்காவில் தடையா ?

பரவிய செய்தி

உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதால் கிண்டர் ஜாய் சாக்லேட்கள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளன.

மதிப்பீடு

சுருக்கம்

கிண்டர் ஜாய் சாக்லேட்களின் ஒரு பகுதியில் இருக்கும் சிறிய பொம்மைகளை குழந்தைகள் விழுங்கிவிடும் அபாயம் இருப்பதால் அமெரிக்காவில் தடை செய்துள்ளனர்.

விளக்கம்

 இந்தியாவில் அதிகம் விற்கப்படும் மிகவும் பிரபலமான சாக்லேட்களில் கிண்டர் ஜாயும் ஒன்று. குழந்தைகளிடத்தில் பிரபலமடைந்த இந்த கிண்டர் ஜாயின் விலை என்னவோ அதிகம் தான். தற்போது இந்திய சந்தைகளில் 45 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

Advertisement

அப்படி என்ன இருக்கிறது என்று இவ்வளவு விலை என்று அனைவரும் நினைப்போம். குழந்தைகளை கவரும் விதத்தில் கிண்டர் ஜாய்முட்டை வடிவில் இருக்கும். இதை இரண்டாகப் பிரித்தால் ஒரு பகுதியில் இரண்டு சாக்லேட்கள் இருக்கும். மற்றொரு பகுதியில் சிறு சிறு பாகங்கள் இருக்கும். அவற்றை எவ்வாறு சேர்க்க வேண்டும் என்ற செய்முறை தாளும் அதனுடனே இருக்கும். குழந்தைகளை எளிதில் கவரும் நோக்கத்தில் சாக்லேட்டையும், பொம்மையையும் ஒரே பாக்கெட்டில் வைத்துள்ளனர். இதை பார்த்து மற்ற நிறுவனங்களும் கிண்டர் ஜாய் போன்றே சாக்லேட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில், கிண்டர் ஜாய் ஆனது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்று அமெரிக்காவில் தடை செய்ததாக செய்திகள் பரவுகின்றன. அமெரிக்காவில் கிண்டர் ஜாய் சாக்லேட்கள் தடை செய்யப்பட்டது என்னவோ உண்மை தான், ஆனால் உண்மையான காரணம் இது அல்லவே.

உணவு பொருள் பற்றியக் கட்டுப்பாடுகள் காரணமாக கிண்டர் ஜாய் ஆனது அமெரிக்காவில் தடை செய்துள்ளனர். அதில் உள்ள சிறிய பாகங்களை குழந்தைகள் விழுங்கிவிடக் கூடாது என்பதற்காக தடை செய்ததாக FDA மற்றும் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தடை செய்தப்போதிலும் கள்ள சந்தைகளில் கிண்டர் ஜாய் பொருள்கள் அதிகாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கிண்டர் ஜாய் சாக்லேட்கள் மீது கூறிய குற்றங்களுக்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.

கிண்டர் சாக்லேட்கள் ஓர் ஐரோப்பிய தயாரிப்பாகும். ஒவ்வொரு வருடமும் 3.5 பில்லியன் பாக்கெட்கள் விற்பனை செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்தில் kinder  surprise என்ற பெயரிலும் இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் kinder joy என்ற பெயரிலும் அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். ஆகையால், 2018 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் கிண்டர் ஜாய் சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஃபெராரோ கூறியுள்ளார்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Advertisement

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

CNN

Back to top button