கிரேப் வாட்டர் பிறந்த குழந்தைகளுக்கு உகந்ததல்ல.

பரவிய செய்தி

பிறந்த குழந்தைகளுக்கு கிரேப் வாட்டர் நல்லதல்ல

மதிப்பீடு

சுருக்கம்

வயிற்று வலிக்காக கொடுக்கப்படும் கிரேப் வாட்டரால் பிறந்த குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவை பிறந்த குழந்தைகளுக்கு உகந்தது அல்ல.

விளக்கம்

பிறந்த குழந்தைகளுக்கு 3 முதல் 6 மாத கால இடைவெளியில் வயிற்று வலியானது அதிகம் ஏற்படும். அத்தகைய தருணத்தில் தான் குழந்தைகளுக்கு கிரேப் வாட்டர் கொடுக்க பலர் பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளின் வயிற்றில் ஏற்படும் வலிக்காக கொடுக்கப்படும் கிரேப் வாட்டர்களில் மிகவும் பிரபலமான கிரேப் வாட்டர் பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் அதிகம் விற்கப்படுகிறது.

Advertisement

“ குழந்தை அழுதா ! கிரேப் வாட்டர் கொடுக்கச் சொல்லு, நான் குழந்தையா இருக்கச்ச என் அம்மாவும் இது தான் எனக்கு கொடுத்தாங்க ” என்ற மிகவும் பிரபலமான வசனத்தை அறியாதவர் எவரும் இலர்.

Wood Wards செய்முறையில், வெந்தய விதை எண்ணெய், சோடியம் பைகார்போனட், ஆல்கஹால் ஒன்றோடொன்று கலக்கப்படுகின்றன. இதற்கு மத்தியில், 1840 ஆம் ஆண்டுகளில் “ fen fever ” எனும் மலேரியா நோயில் இருந்து காப்பதற்காக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளையும் இணைத்துள்ளனர். மலேரியாவின் சிகிச்சைக்கான வடிவமைக்கப்பட்ட மருந்தால் ஆனது தற்போது குழந்தைகளின் வயிற்று வலி சிகிச்சைக்காக வழங்கப்படுவது மட்டுமின்றி விற்பனையிலும் தனது தரத்தை உயர்த்தியுள்ளது.

கிரேப் வாட்டர் குறித்து இங்கிலாந்தின்  Sheffield-ல் 200 தாய்மார்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 64% தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திலேயே கிரேப் வாட்டர் கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாத காலங்களில் தாய்ப்பால் விடுத்து வேறு ஏதேனும் நீர் ஆகாரங்கள் அளிப்பது, வயிற்று வலிக்காக கிரேப் வாட்டர் கொடுப்பதால் குழந்தைகளுக்கு பாக்டீரியா, அலர்ஜீஸ் மற்றும் குடலில் எரிச்சல் உண்டாக வாய்ப்புள்ளது.

Advertisement

ஆல்கஹால் உள்ளடங்கிய கிரேப் வாட்டர்கள் குடிப்பதற்கு இனிமையான இருக்கலாம். இன்னும் பிற கிரேப் வாட்டர்களில் சேர்க்கப்படும் ஆல்கஹால் 9% அளவிற்கு செல்வதால், இதனால் குழந்தைகள் இவற்றிக்கு அடிமையாக வாய்ப்புள்ளது.

இந்திய சந்தையில் உள்ள பல நிறுவனங்களின் கிரேப் வாட்டர்களில் ஆல்கஹால் சேர்க்கப்படவில்லை என்று கூறினாலும், அவை வெந்தய விதை எண்ணெய்(dill seed oil), சோடியம் பைகார்போனட், போன்றவற்றின் கலவை என்பதை அறிய முடிகிறது.

மேலும்,  கிரேப் வாட்டரில் preservatives என்று குறிப்பிட்டு bronopol, sodium methylparaben, sodium propyl paraben, sodium benzoate என்ற வேதிப்பொருள்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

2007 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மின்னேசோட்டா மாகாணத்தில் FDA-வின் முழுமையான விசாரணைக்கு பிறகு, ஆறு வாரக் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட ஆப்பிள் ஃப்ளேவர் கிரேப் வாட்டரால் நோய் தொற்று ஏற்பட்டதையடுத்து, baby bliss கிரேப் வாட்டர் தயாரிப்புகளை தூக்கி எறியுமாறு அறிவுரை செய்தனர்.

பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய் பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், சீரணமாக 5 மாதம் மேல் எனில் சீரகத் தண்ணீர் தரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

*Disclaimer: This information are based on available source,  we request readers to consult doctor before taking any decision and not based on this or any article in interest.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button