This article is from Nov 16, 2017

குழந்தையின் படத்தை ஷேர் செய்வதால் பணம் கிடைக்குமா ?

பரவிய செய்தி

குழந்தையின் வயிற்றில் கொக்கி ஒன்று மாட்டி உள்ளதை படத்தில் காணலாம் . இந்த படத்தை ஷேர் செய்வதால் அக்குழந்தையின் ஆப்ரேஷன் செலவிற்கு உங்களால் ஒரு ரூபாய் கிடைக்கும் . எனவே அனைவரும் கட்டாயம் ஷேர் செய்யுங்கள் .

மதிப்பீடு

சுருக்கம்

இந்த குழந்தையின் வயிற்றிற்குள் கொக்கி மாட்டியது  உண்மைதான் , ஆனால் இது போன்ற படங்களை ஷேர் செய்வதால் நிறுவனத்தால் பணம் எதுவும் கிடைக்காது .

விளக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கோகிலா என்பவர் தனது 10 மாத குழந்தையின் உடல்நிலை சரியில்லை என்பதால் குழந்தை ஏதாவது விழுங்கிருக்கும் என்று எண்ணி அப்பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் . குழந்தைக்கு தாய் பாலூட்டும் போது மின்சாரம் தடைப்பட்டுள்ளது . அந்த குழந்தை இருளில் தனது தாயின் கழுத்து சங்கிலியில் இருந்த கொக்கியைவிழுங்கியுள்ளது என்று தெரியவந்தது . ஆகையால் நடுஇரவில் குழந்தையை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர் .

குழந்தையின் தொண்டையை தொட்டுப் பார்க்கும்போதே தெரியும் எதையோ விழுங்கி விட்டால் என்று , ஆனால் கொக்கியை விழுங்கி இருப்பாள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று குழந்தையின் தாயார் கூறியுள்ளார் . குழந்தையின் உணவுக்குழல் மிகச் சிறியதாக உள்ளது . மேலும் வயிற்றிற்குள் கொக்கி கிழித்து விட்டால் ஆபத்தாகிவிடும் என்று  மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய தயங்கினர் .

பின்னர் குழந்தையின் வயிற்றில் சிறிதாக கிழித்து கிரிஸ்டோஸ்கோபி முறையில் கொக்கியை நீக்கியுள்ளனர் . அறுவை சிகிச்சை முடிந்து குழந்தை சிறிது நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் கூறினர் . குழந்தையின் அறுவை சிகிச்சை முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது .

அதன் பின் குழந்தையையும் தாயையும் படம் எடுத்துள்ளனர் . இவை அனைத்தும் நடந்தது 2015 ஏப்ரல் மாதம் . இப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் குழந்தையின் உயிர்க்கு ஆபத்து என்றும் , குழந்தையின் படத்தை ஷேர் செய்தால் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் கிடைக்கும் என்றும் கூறி வந்தனர் .

இது போன்ற படங்களை ஷேர் செய்வதால் பணம் எதுவும் கிடைக்காது . இவ்வாறு சமூக வலைதளங்களில் செய்திகளை பதிவிடுவதால் தனது பேஸ்புக் பக்கத்திற்கு அதிகமாக லைக் , ஷேர் வரும் என்று எண்ணி சிலர் இவ்வாறு செய்கின்றனர் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader