கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகமா இது ?

பரவிய செய்தி

1999 ஆம் ஆண்டில் சிறு கட்டிடத்தில் தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் தற்போதைய கூகுள் நிறுவனத்தின் அலுவலகம்.

மதிப்பீடு

சுருக்கம்

சீனாவில் புஜியான் மாகாணத்தில் அமைந்துள்ள இக்கட்டிடம் சீன விளையாட்டு மேம்பாட்டாளர் NetDragon Websoft-க்கான தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

விளக்கம்

 உலகம் முழுவதும் அதிகளவில் தகவல் தேடுதலுக்காக மக்களால் பயன்படுத்தப்படும் தளமாக கூகுள் இருந்து வருகிறது. அவ்வாறு வளர்ச்சிப் பெற்ற கூகுள் நிறுவனமானது 1999 ஆண்டு குறைந்த அளவில் பணியாளர்களை கொண்டு சிறிய கட்டிடத்தில் தொங்கப்பட்டது. இப்படி ஆரம்பிக்கப்பட்ட கூகுள் நிறுவனத்தின் தற்போதைய அலுவலகம் தான் இது எனக் கூறி ஓர் படமானது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement

கூகுள் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருப்பது என்பது உண்மையே. ஆனால், அந்நிறுவனத்தின் அலுவலகம் என்றுக் கூறும் படங்கள் கூகுள் நிறுவனத்தின் அலுவலகமே அல்ல. அவை சீனாவில் உள்ள கட்டிடம் ஆகும்.

star trek

   சீன நிறுவனமான Baidu-வில் பணியாற்றி வரும் ஒரு சீன தொழில்நுட்ப நிர்வாகி ஸ்டார் ட்ரெக்கின் USS எண்டர்பிரைசஸ்  வடிவில் ஒரு அலுவலகக் கட்டிடத்தை வடிவமைத்துள்ளார். இந்த கட்டடிடத்தின் கட்டுமானப் பணிகள் 2010-ம் ஆண்டில் சீனாவின் புஜியான் மாகாணத்தின் கடலோர நகரமான சாங்கில் தொடங்கியது. இக்கட்டிடத்தின் வேலைபாடுகள் அனைத்தும் 2015-ம் ஆண்டு முழுவதுமாக நிறைவடைந்தன. 260 மீட்டர் நீளமுள்ள இக்கட்டிடத்தை உருவாக்க மொத்தம் 600 மில்லியன் யுவான் ( $97 மில்லியன் ) செலவு செய்துள்ளனர்.

 பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இக்கட்டிடங்கள் “ ஸ்டார் ட்ரெக் “ படங்களில் வரும் விண்வெளி விமானம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. வானில் இருந்து எடுக்கப்பட்ட அக்கட்டிடத்தின் படங்களில் அவை ஓர் விமானத்தை போன்றே காட்சியளிக்கின்றது. இவ்வாறு பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கட்டிடம் சீன விளையாட்டு மேம்பாட்டாளர் நிறுவனங்களில் ஒன்றானNetDragon Websoft-க்கான தலைமை அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடங்கள் தொடர்பாக சில பிரச்சனைகள் எழுந்தன. எனினும், இக்கட்டிடம் சட்டப்பூர்வமாக  அனைத்து அனுமதிகளைப் பெற்று நிறுவியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சீன நிறுவனத்தின் அலுவலகக் கட்டிடத்தை கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் எனக் கூறி தவறானச் செய்திகளைப் பரப்பியுள்ளனர் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

Advertisement
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button