This article is from Nov 11, 2017

சுங்கசாவடியில் காத்திருந்தால் பணம் செலுத்த தேவையில்லையா ?

பரவிய செய்தி

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களில் வரிசையில் காத்திருந்தால் சுங்கவரி கட்ட தேவை இல்லை .

மதிப்பீடு

சுருக்கம்

அப்படியென்றால் இந்தியாவின் போக்குவரத்து நெரிசலை பொறுத்துவரை எவரும் பணம் செலுத்த  வாய்ப்பில்லையே !!!

விளக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களில் வரிசையில் காத்திருந்தால் சுங்கவரி கட்ட தேவை இல்லை என்பது வதந்தியே  . சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவது பற்றி வந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை. மேலும், இது தொடர்பான எந்தவொரு அறிக்கையும் தாங்கள் வெளியிடவில்லை என்று  நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறையை சார்ந்த அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது .

இந்த வதந்திக்கு ஆதாரமாக காட்டப்பட்ட RTI கூறியதாக காண்பிக்கப்பட்ட தாளில் உள்ள தேதி 2016 என்று உள்ளது . மேலும் இந்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் , இதுபோல் எந்த விலக்கும் அளிக்கவில்லை என்றும்  சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் 27-4-2017 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது .

 இதை அறியாமல் சிலர் சமூக வலைதளங்களில் வேகமாக இச்செய்தியை பரப்பி வருகின்றன . இந்த செய்திகளை உண்மை என்று நம்பி ஊடகங்களும் வெளியிட்டுள்ளனர் .

செய்தி தாள்களிலும் , ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டதால் மக்களும் நம்பியுள்ளனர் . ஃபேஸ்புக் வட்டாரங்களில் இதுபோல் வீண் விளம்பரத்திற்காக வதந்திகளை பகிர்கின்றன . அவர்கள் இனிமேலாவது உண்மை செய்தியை அறிந்து செயல்பட வேண்டும் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader