சுவிட்சர்லாந்து நாட்டின் வரவேற்பு பலகையில் ‘தமிழ்’.

பரவிய செய்தி

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வரவேற்பு பலகையில் “ நல்வரவு ” என்று தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

சுவிட்சர்லாந்து நாட்டின் பேஸல் நகரில் 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வரவேற்பு பலகையில் உலகின் பழமைவாய்ந்த மொழிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் பழமையான மொழியான தமிழ் மொழியில் “ நல்வரவு ” என்று எழுதப்பட்டுள்ளது ”.

Advertisement

ஆகஸ்ட் 28, 2017-ல் CentrePoint Basel CH என்ற ட்விட்டர் பக்கத்தில், பேஸல் நகரை விட்டு செல்வதற்கு முன்பு “ WELCOME ON BOARD ”-ஐ பாருங்கள் என்று பதிவு செய்யப்பட்டது. அப்பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்திலும் தமிழை காணலாம்.

சுவிட்சர்லாந்தில் வரவேற்பு பலகை மட்டுமின்றி மொழிப் பெயர்ப்பு செய்யும் அலுவலகத்திலும் தமிழ் இடம் பெற்றுள்ளது. பேஸல் நகரில் உள்ள GGG Migration  என்ற சமுகநல அமைப்பு, வேலை நிமித்தமாக மற்றும் குடிபெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் மக்களுக்கு ஏற்படும் மொழி சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது மட்டுமின்றி மொழி பெயர்ப்பும் செய்து வருகிறார்கள்.

ஆங்கிலம், அரபி, தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் வேலை, குடியுரிமை, வருமானவரி, காப்புரிமை, வீடு, குடும்பம், கல்வி மற்றும் உடல்நலம் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கத்துடன் கூடிய பதில்கள் அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வரவேற்பு பலகையில் இந்திய மொழிகளில் தமிழ் மொழி மட்டும் இடம்பெற்றிப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் இடம்பெற்ற பெயர் பலகை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button