This article is from Dec 07, 2017

ஜெயலலிதா சமாதியின் மீது ஏறி தினகரன் அட்டூழியமா?

பரவிய செய்தி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினத்தில், TTV தினகரன் ஜெயலலிதாவின் சமாதியின் மீது ஏறி அட்டூழியம் செய்த புகைப்படங்கள் செய்திதாளில் வெளியாகியுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்த தனது ஆதரவாளர்களோடு சென்றார் TTV தினகரன். அந்நேரத்தில் கூட்ட நெரிசலின் காரணமாகச் பலர் அவரின் மீது விழும் போது தற்செயலாக சமாதியில் கால் வைத்துள்ளார். பின்பு மன்னிப்புக் கேட்கும் விதத்தில் சமாதியைத் தொட்டு வணங்கி உள்ளார்.

விளக்கம்

டிசம்பர் 5, 2017 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், பல அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

   இந்நிலையில், திரு.TTV.தினகரன் அவர்களும் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அவர் அஞ்சலி செலுத்த சமாதியின் முன் நிற்கும் போது, அவருக்கு பின்னால் நின்றவர்களின் கூட்ட நெரிசலால் பலரும் முன்னும், பின்னும் விழத் தொடங்கினர். அச்சமயத்தில் தினகரனின் பின்னால் இருந்த ஒரு பெரியவர் கீழே விழ, நிலைத் தடுமாறிய தினகரன் ஜெயலலிதாவின் சமாதியின் மீது காலை வைத்துள்ளார். பின்பு மன்னிப்பு கேட்பது போன்று சமாதியை தொட்டு வணங்கியுள்ளார்.

அதன் பிறகு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக பலரும் சமாதியின் மேல் விழத் தொடங்கினர். இதையடுத்து, தினகரன் திரும்பிச் சென்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியது என நடந்த அனைத்து நிகழ்வுகளும் ஊடகங்களால் எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளன.

ஆனால், ஒரு சில செய்தித்தாளில் TTV தினகரன் ஜெயலலிதா சமாதியின் மீது ஏறி அட்டூழியம் செய்வதாகக் கூறித் தவறாச் செய்தியை வெளியிட்டுள்ளனர். நடந்த நிகழ்வை அறியாமல் தினகரன் அவர்களின் மீது வீண்பழியைச் சுமத்திருப்பது, தெரியாமல் செய்த தவறா அல்லது அவரை கொடூரமானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே உருவாக்க செய்த செயலா என்று தெரியவில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader