டெல்லியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்.

பரவிய செய்தி
டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் நடவடிக்கையால் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் மாற்றி அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்கப்படுகின்றன.
மதிப்பீடு
சுருக்கம்
அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி மற்றும் அரசு பள்ளிகளை சீரமைத்து மாணவர்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான கல்வியை வழங்கும் நோக்கத்தில் டெல்லி ஆம் ஆத்மி அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றியுள்ளனர். இனி அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட உயர்ந்த தரத்தில் இருக்கும் என்று டெல்லியின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விளக்கம்
டெல்லியில் உள்ள ரௌஸ் அவென்யு பகுதியில் அமைத்துள்ள சர்வோதயா பால வித்யாலயா பள்ளியில் பல ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெறாத காரணத்தினால் பள்ளியின் மேசைகள் பாழடைந்தும், கட்டுமானப் பணிகளின் சத்தத்தினாலும் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதித்தன, மேலும், பள்ளியில் சரியான வசதிகள் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், ஜனவரி 2017ல் சர்வோதயா பால வித்யாலயா பள்ளியின் கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு, பாழடைந்த மேசைகள், நாற்காலிகளை நீக்கி புதுவிதமான ஃபைபேர் மேசைகள், நாற்காலிகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி, லைட்கள், ஆறு புதிய ஸ்மார்ட் வகுப்பறைகள், உடற்பயிற்சி அறை, 11 புதிய அறைகள், நூலகம் என பள்ளியையே மேம்படுத்தியுள்ளனர். பள்ளியில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுத்தியதோடு ஆசிரியர்களுக்கும் பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளதாக அப்பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக பள்ளியின் கட்டிடங்கள் சீரமைக்கப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்தன. ஆனால், தற்போது டெல்லி அரசின் பெரும் முயற்சியால் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியை மாற்றியுள்ளனர். மேலும், தனியார் பள்ளிகள் போன்று இப்பள்ளியில் 1,115 மாணவர்கள் பயில இயலும் என்று சர்வோதயா பால வித்யாலயா பள்ளியின் தலைமையாசிரியர் அரவிந்த் சர்மா கூறியுள்ளார்.
டெல்லியின் கல்வி அமைச்சர் சிசொடியா தனது ட்விட்டர் பக்கத்தில், “ அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளே சிறந்தது என்று நினைபவர்கள் ரௌஸ் அவென்யு பகுதியில் அமைத்துள்ள சர்வோதயா பால வித்யாலயா பள்ளிக்கு சென்று பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார்.
அரசு பள்ளிகளின் தரம் மேம்படுத்தல் குறித்து சிசொடியாவின் ஆலோசகர் அதிஷி மர்லினா கூறிகையில், “ நேரம் மற்றும் நிதியைப் பொருத்து துவக்க நிலையாக 50 பள்ளிகள் மட்டுமே இந்த பைலேட் ப்ராஜெக்ட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சர்வோதயா பால வித்யாலயா பள்ளிக்கு மட்டும் 10 கோடி செலவழித்துள்ளோம். எங்களின் அனுபத்தைக் கொண்டு 1,000 பள்ளிகளை ஒளிமயமாக்குவோம் ” என்று தெரிவித்திருந்தார்.
அரசின் முயற்சிகளால் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்தால் மட்டுமே நாட்டில் குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர்கள் பல லட்சங்களை செலவழிக்கும் அவலநிலை மாறும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.