டெல்லியில் 11 மாதப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்.

பரவிய செய்தி

11 மாதக் பெண் குழந்தையை கடத்திய ஒருவன் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

2016 ஆம் ஆண்டு டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த 11 மாதக் குழந்தையை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தக் கட்டிடத் தொழிலாளியைக் காவல்துறை கைது செய்தது.

விளக்கம்

மேற்கு டெல்லியில் விகாஸ்புரி என்ற பகுதியில் 3வது பட்டாலியன் காவலர் குடியிருப்புப் பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள காவல் நிலையச் சுற்றுச்சுவர் கட்டிடப் பணிக்கு வந்த கட்டிடத் தொழிலார்கள் அக்குடியிருப்பு பகுதிக்குள் தற்காலிக குடிசைகளை ஏற்படுத்தித் தங்கி வந்தனர். அக்கட்டிடத் தொழிலாளர்கள் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள்.

Advertisement

இந்நிலையில், செப்டம்பர் 2016-ல் பக்கத்து வீட்டில் இரவில் தாயுடன் தூங்கிக் கொண்டு இருந்த 11 மாதக் குழந்தையை 36 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவன் கடத்தி சென்றுள்ளான். குழந்தையை அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

இதற்கிடையில் அக்குழந்தையின் தாயார் கண்விழித்து பார்த்தப் பொழுது அருகில் இருந்த குழந்தையைக் காணவில்லை என்று பதறியுள்ளார். அதன்பின் அனைவரும் அருகில் உள்ள பகுதிகளில் குழந்தையைத் தேடியுள்ளனர். அப்போது புதரில் மயங்கிக் கிடந்த நிலையில் குழந்தையைக் கண்டுபிடித்தனர். தகவலறிந்து வந்த விகாஸ்புரி காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

                                                      

குழந்தைக் கிடைத்த இடத்தில் கிடைத்த செல்போனை வைத்து விசாரித்த போது, கட்டிடப் பணிக்காக பீகாரில் இருந்து வந்த 36 வயதான கட்டிடத் தொழிலாளி தான் இக்கொடூரச் செயலைச் செய்துள்ளான் என்று தெரியவந்தது. அதன் பின்னர் அக்கொடூரனை காவலர்கள் கைது செய்து விசாரித்ததில், குழந்தையைக் கடத்தி இரண்டு மணி நேரம் பாலியல் ரீதியான துன்புறுத்தலை செய்துள்ளான். இதனால் குழந்தைக்கு அதிகளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டதால் பயந்து குழந்தையை அங்கே விட்டுவிட்டு ஓடியதாக என்று காவல்துறையிடம் கூறியுள்ளான்.

குழந்தையிடம் கொடூரமாக நடந்துக் கொண்டவனின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டான். தேசிய குற்ற ஆவணப் பணியகம் தகவலின்படி, 2015-ல் குழந்தைகளின் மீது 927 பாலியல் பாலத்கார சம்பவங்கள் நடந்ததாகத் தெரியவந்துள்ளது. நாட்டில் பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக குழந்தைகளின் மீதான வன்புணர்வு சம்பவங்கள் அதிகளவில் நடந்துக் கொண்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும்..!

Advertisement

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

TIMES OF INDIA

image- the independent

Back to top button