டொனால்டு ட்ரம்ப் அதிபரானது முன்கூட்டியே கணிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அவர் வெற்றி பெற்ற பகுதிகளின் விவரங்கள் வரை அனைத்தும் 2000-ம் ஆண்டிலேயே Simpsons கார்ட்டூன் தொடரில் இடம்பெற்றுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுவது ஜூன் 15, 2015-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. ஆனால், ட்ரம்ப் உரையாற்றுவது தொடர்பான காட்சிகள் Simpsons தொடரில் “ trumptastic voyage” என்ற தலைப்பில் ஜூலை 7, 2015-ல் வெளிவந்தது.
விளக்கம்
Fox Animated series-ன் The Simpsons கார்ட்டூன் தொடரில் வருங்காலத்தில் நடைபெற உள்ள பல நிகழ்வுகள் முன்பே நேர்த்தியாக கணிக்கப்பட்டு கூறப்பட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் அதன் படங்கள் வைரலாகி வருகிறது.
குறிப்பாக, அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது 2000-ம் ஆண்டிலேயே கணிக்கப்பட்டு விட்டதாகக் கூறி பரவி வருகிறது. மேலும், இதை தொடர்புப்படுத்தி வருடங்களை மட்டும் மாற்றி பல்வேறு மீம்கள் சமூக வலைதளங்களில் காணப்படுகிறது.
ட்ரம்ப் அதிபர் ஆனது | ஜனவரி 20, 2017 |
ட்ரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது | ஜூன் 15, 2015 |
simpsons கார்ட்டூன் ஒளிபரப்பப்பட்டது | ஜூலை 7, 2015 |
ஜூன் 15, 2015-ல் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கபட்டு நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் டவரில் உரையாற்றியதை 2000/2006 ஆண்டிலே கணிக்கபட்டதாகக் கூறுவது தவறு. கார்ட்டூன் வடிவில் ட்ரம்ப் உரையாற்றுவது தொடர்பான காட்சிகள் ஜூலை 7, 2015-ல் simpsons தொடரில் “ trumptastic voyage” தலைப்பில் “அனிமேஷன் டோனிமேஷன் ” என்ற “youtube channel”-ல் வெளியானவை. அவற்றை பயன்படுத்தி வதந்தியை பரப்பியுள்ளனர்.
மேலும், அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பகுதிகளின் விவரங்கள் உள்ளடக்கிய “ எலெக்ட்ரோல் ” வரைபடமும் தவறானவையே ஆகும். முன்பே கணிக்கப்படதாகக் கூறும் வரைபடத்தில் விஸ்கான்சின், ஒஹியோ, பென்சில்வேனியா போன்ற பகுதிகள் நீள நிறத்தில் உள்ளன. ஆனால், உண்மையான வரைபடத்தில் அவை சிகப்பு நிறத்தில் உள்ளன. வெர்ஜினியா மாநிலம் சிகப்பாக தவறாகக் காண்பிக்கப்பட்டது. அவை 2016-ல் நீள நிறம் ஆகும். சிகப்பு நிறம் ட்ரம்ப் வெற்றி பெற்ற பகுதிகளை குறிக்கின்றது.
உலகில் நடைபெறும் நிகழ்வுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிலரால் கணிக்கப்பட்டு விட்டன, சிலரால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன என்றெல்லாம் கூறி சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.