தமிழக அரசின் கேபிள் டிவிக்கு செட்டாப் பாக்ஸ்கள் இலவசம்.

பரவிய செய்தி
தமிழ்நாடு அரசின் கேபிள் டிவிக்கு செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு முறை இணைப்பு கட்டணமாக உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ரூபாய் 200 மட்டும் செலுத்தினால் போதும், மாத சந்தாவை GST வரியுடன் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
தமிழக அரசின் கேபிள் டிவியை பயன்படுத்துபவர்களுக்கு ” இலவச செட்டாப் பாக்ஸ்களை ” வழங்க வேண்டும். மேலும், பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள மட்டும் கேபிள் ஆபரேட்டர்கள், ஒரு முறை கட்டணமாக 200 ரூபாயை சந்தாதாரர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
விளக்கம்
2016 ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா அவர்களின் தேர்தல் அறிக்கையில், அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் மற்றும் அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் தரமான சேவை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதை நிறைவேற்றும் வகையில், தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் பெறப்பட்டு, அதன் கட்டுப்பாட்டு அறையை நுங்கம்பாக்கத்தில் தமிழக முதலவர் கே.பழனிசாமி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசு கேபிள் நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. இன்னும் மூன்று மாதத்திற்குள் அனைத்து சந்தாதாரர்களுக்கும் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு டிஜிட்டல் சேவை அளிக்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ளது.
சேனல் தொகுப்புகள் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் நான்கு தொகுப்புகளாக கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளன.
வரிசை எண்
|
தொகுப்பின் பெயர் | கட்டண சேனல்களின் எண்ணிக்கை | கட்டணமில்லா சேனல்களின் எண்ணிக்கை | மொத்த சேனல்களின் எண்ணிக்கை | மாத சந்தா
(ரூபாய்) |
1. | தொகுப்பு-1 | 22 | 158 | 180 | ரூ125 |
2. | தொகுப்பு-2 | 72 | 158 | 230 | ரூ175 |
3. | தொகுப்பு-3 | 102 | 158 | 260 | ரூ225 |
4. | தொகுப்பு-4 | 142 | 158 | 300 | ரூ275 |
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாத சந்தாவானது GST வரி சேர்க்காமல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் 18% GST வரியை சேர்த்து வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
உள்ளூரில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைத்து சந்தாதாரர்களிடம் இருந்து, பூர்த்தி செய்த “வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தை” பெற்றுக் கொண்டு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி இணைப்பு கொடுக்க வேண்டும். மேலும், செட்டாப் பாக்ஸ்களின் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டும் “ ஒரு முறை தொகையாக ” 200 ரூபாய் தொகையை மட்டும் சந்தாதாரர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதைத் தவிர்த்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அதிக தொகை கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் புகார்களை தெரிவிக்கலாம்.