This article is from Nov 11, 2017

தாஜ்மஹாலில் விளக்குகள் இல்லாததற்கு காரணம் என்ன ?

பரவிய செய்தி

உலக அதிசியமான தாஜ்மஹாலில் விளக்குகளே இல்லை தெரியுமா . ஒரு முறை அரசாங்கம் தாஜ்மஹால் முழுவதும் விளக்குகளை பொருத்தியுள்ளனர் ஆனால் அணைத்து விளக்குகளும் உடைக்கப்பட்டு , இங்கு மும்தாஜின் ஆன்மா உறங்குகின்றது என்று எழுதப்பட்டு இருந்தது . இதனால் விளக்குகள் பொறுத்த வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர் .

மதிப்பீடு

சுருக்கம்

விளக்குகள் பொருத்தாமல் இருப்பது என்பதோ  உண்மைதான் , ஆனால் காரணம்  மும்தாஜ் ஆன்மா அல்ல பூச்சிகள் தான் .

விளக்கம்

தாஜ்மஹாலில் விளக்குகளே இல்லை. காரணம், ஒரு முறை இந்திய அரசாங்கம் தாஜ்மஹால் முழுவதும் விளக்குகளை பொருத்தியுள்ளனர். எனினும், அடுத்த நாள் அனைத்து விளக்குகளும் உடைக்கப்பட்டு , இங்கு மும்தாஜின் ஆன்மா உறங்குகின்றது என்று எழுதப்பட்டு இருந்தது . இதனால் தாஜ்மஹாலில் விளக்குகள் பொறுத்தாமல் உள்ளனர் என்று சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டன.

இவர்கள் கூறுவது போல் விளக்குகள் பொருத்தாமல் இருப்பதற்கு காரணம் மும்தாஜின் ஆன்மா அல்ல பூச்சிகள் தான் உண்மையான காரணம் . ஆம் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுவதால் விளக்குகள் பொருத்தாமல் உள்ளனர் .

விளக்குகள் பொருத்தினால் பார்க்க அனைவரையும் கவரும்படி இருக்கும் ,  இரவு நேரத்தில் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் தாஜ்மஹாலின் சுவர்கள் , தரைப்பகுதி போன்ற ஒளிமிகுந்த பகுதியில் வந்து அமர்ந்து விடும் . அதன்பின் அவைகள் தன் எச்சங்களை அந்த பகுதிகளில் வெளியிடுகின்றன .

இதனால் தாஜ்மஹாலின் நிறத்தில் மாறுபாடுகள்  எற்பட வாய்ப்புள்ளதாக  கூறியுள்ளனர் . எனவே விளக்குகள் எதுவும் பொருத்தாமல் உள்ளனர் .  இவையே முக்கிய காரணம்  ஆகும் .  எனினும், சிறிது தொலைவில் சில விளக்குகள் அந்த பகுதியை சுற்றி உள்ளன .

தாஜ்மஹாலின் நிறத்தில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக செய்த செயலை மாற்றி உள்ளனர் இந்த இணைய வாசிகள் . வரலாற்று சிறப்புமிக்க இந்த அதிசயத்தின் அழகை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader