This article is from Dec 31, 2017

திருநள்ளாரில் செயற்கைக்கோள்கள் 3 நிமிடங்கள் செயலிழந்ததா ?

பரவிய செய்தி

திருநள்ளார் சனிபகவான் கோவிலை கடக்கும் போது நாசாவின் செயற்கைக்கோள்கள் மூன்று நிமிடங்கள் செயல் இழந்துள்ளது . இதனால் நாசாவே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

இதுபோன்ற எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை என்று இஸ்ரோவின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார் ..

விளக்கம்

       சில வருடங்களுக்கு முன்பு வலைதளங்களில் ஓர் கதை அதிகமாக பரவி வந்தது . அக்கதையானது , அமெரிக்காவின் செயற்கைக்கோள் ஒன்று பூமியை சுற்றி வரும் போது 3 நிமிடங்கள் செயல் இழந்து உள்ளன . 3 நிமிடங்களுக்கு பின் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது . ஆனால்  அந்த செயற்கைக்கோளில் எந்த ஒரு பழுதும் ஏற்படவில்லை . இதை பற்றி நாசா ஆராய்ந்து பார்த்தது , அதன் முடிவு அதிர்ச்சி மட்டுமல்லாமல் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

செயற்கைக்கோள் செயலிழந்த அந்த குறுப்பிட்ட இடமானது புதுச்சேரியில் அமைந்துள்ள திருநள்ளார் சனிபகவான் ஆலயம் அமைந்துள்ள பகுதி ஆகும் . இக்கோவிலின் வான்பகுதியை கடக்கும் போது எந்த ஒரு செயற்கைக்கோளும் மூன்று நிமிடங்கள் செயலிழக்க நேரிடும் . அதற்கான காரணம் சனிக்கோளில் இருந்து கண்களுக்கு புலப்படாத கருநீலக்கதிர்கள் அக்கோவிலின் மீது ஒவ்வொரு நொடியும் விழுந்து கொண்டே இருக்கின்றன . அக்கதிர்களின் அடர்த்தியானது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நடைபெறும் சனிபெயர்ச்சியின் போது 45 நாட்கள் அதிகமாக இருக்கும் .

இதனால் அப்பகுதியை கடக்கும் செயற்கைக்கோள்கள் செயலிழக்குமே தவிர பழுதடையாது . இதன் பின்னர் நாசா திருநள்ளாரில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டது . மனிதனுக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பது நிரூபனம் ஆகியுள்ளது . இந்த கதை பல வருடங்களாக அனைவராலும் நம்பப்பட்ட கதையாகும் .

இச்செய்தி பற்றிய தகவல்கள் எதுவும் நாசாவின் இணையதளத்தில் இல்லை . மேலும் எந்தவொரு தளத்திலும் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை . இது போன்ற நிகழ்ச்சி நடக்கவே இல்லை என்பதற்கு பல காரணங்களை கூறலாம் . செயற்கைக்கோள் பூமியை சுற்றிவரும் போது அரை நொடி செயலிழந்தால் , அது பூமியை நோக்கி கீழே விழத் துவங்கி  விடும் . 8 கி.மீ/நொடி வேகத்தில் செல்லும் எந்த ஒரு பொருளையும் நொடியில் நிறுத்த இயலாது .

செயற்கைக்கோள் செயலிழக்கும் என்று வைத்துக் கொண்டாலும் புகைப்பட கருவிகளும் வேலை செய்ய இயலாது தானே . பின்னே எவ்வாறு கூகுளால் திருநள்ளாரின் படங்களை எடுக்கப்பட முடிந்தது . இவ்வாறு தவறான கதைகளால் சனிபகவானின்  புண்ணியதலத்திற்கு உள்ள நற்பெயரைக் கெடுக்க வேண்டாம் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader