தீபாவளி இரவில் நாசா எடுத்த இந்தியாவின் படமா இது ?

பரவிய செய்தி

தீபாவளியன்று இரவில் இந்தியா ஒளியால் மின்னுகின்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

1992-2003 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் பற்றிய தகவலுக்கான விவரங்களை இப்படத்தின்  மூலம் அறியலாம் .

விளக்கம்

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை தான் தீபாவளி எனப்படும் தீபஒளித்திருநாள் . அன்று வீடுகளில் விளக்குகள் ஏற்றி , பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடுவர் . தீபாவளியன்று இரவில் இந்தியாவே ஒளியால் மின்னுகின்ற ஒரு படத்தை நாசா வெளியிட்டதாக கூறிக் காணப்படுகின்றது . ஒவ்வொரு வருட தீபாவளியன்றும் இந்த படமானது வலைதளங்களில் மிக அதிகமாக பதிவிடுவார்கள் . ஆனால் உண்மையில் தீபாவளி இரவு அன்று இது போன்ற எந்தவொரு படத்தையும் எடுக்கவில்லை . தீபாவளி அன்று இந்தியாவை படம் எடுத்ததாக எந்தவொரு பதிவும் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது .

Advertisement

அப்படியானால் படத்தில் உள்ள மின்னுகின்ற ஒளி எதை குறிக்கின்றது என்று கேள்விகளே முதலில் வரும் . இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகை பற்றி வெளிப்படுத்திய காட்சிகளின் மேலோட்டமாக இப்படம் அமைந்துள்ளது . இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள் தொகையானது பெருகிக்கொண்டே உள்ளது . இந்தியாவில் பல இடங்களில் மக்கள் தொகை பெருக்கத்தால் மக்கள் வசிக்கும் இடங்கள் அதிகம் பெருகி உள்ளது என்பதை இப்படத்தின் வாயிலாக அறியலாம் .

வெள்ளை விளக்குகள் 1992 க்கு முன்பு உள்ள இந்தியாவில் காணப்பட்ட மக்கள் தொகையை காண்பிக்கின்றது . நீல விளக்குகள் 1992 இல் தோன்றிய இடங்கள் , பச்சை விளக்குகள் 1998 இல் தோன்றியது , சிகப்பு விளக்குகள்  2003 இல் பெருகிய மக்களை குறிக்கின்றது . 1992-2003 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகையானது அதிகமாகி உள்ளது .

இந்தபுகைப்படமானது தீபாவளியன்று அல்லது அதற்கு நெருங்கிய  நாட்களில் எடுத்ததாக கூறிக்கொண்டு இருந்தாலும் எடுக்கப்பட்ட நேரத்தை சரியாக கூற இயலவில்லை . இன்றளவும் அனைவரும் இப்படத்தை நம்பி வருகின்றனர் . நம்மில் பலர் வெள்ளை விளக்கானது தீப ஒளியாலும்  பட்டாசு வெடிப்பதாலும் ஏற்பட்ட வெளிச்சம் என்று நினைத்து கொள்கின்றனர் . இது போன்ற தவறான செய்திகளை சிலர் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வர் . இந்த படமானது தீபாவளியன்று இரவு எடுக்கப்பதாக இருந்தால் இலங்கை , இந்தோனேசியா போன்ற நாடுகளும் , தீவுகளும் ஒளியால் மின்னுவதேன் .

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Advertisement
Please complete the required fields.
ஆதாரம்

Back to top button