தூய்மை இந்தியா திட்டத்தை விமர்சித்த ஐ.நா-வின் அறிக்கை.

பரவிய செய்தி
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை, பள்ளிகளில் கழிவறை வசதிகள் சரியில்லை, 2016 மற்றும் 2017 தகவலறிக்கையில் தவறுகள் இருப்பதாகக் கூறி தூய்மை இந்தியா திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளது ஐ.நா-வின் அறிக்கை.
மதிப்பீடு
சுருக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையில், இந்தியாவில் மேற்கொண்ட “ தூய்மை இந்தியா திட்டம் ” மிகைப்படுத்தப்பட்டதோடு, பிழைகளும் இருக்கின்றன. மேலும், இந்தியாவின் கிராமப்புற பகுதியில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
விளக்கம்
இந்திய அரசின் அழைப்பையேற்று வருகைத் தந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த லியோ ஹெல்லேரின் அறிக்கையின்படி, தற்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தூய்மை இந்தியா திட்டதிற்கு பயன்படுத்திய லோகோவில் மகாத்மா காந்தியின் “மூக்கு கண்ணாடியின் லென்சை” மாற்றி மனித உரிமை ஆணையத்தின் லென்சை பொருத்த வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு குடிசை வாழ் பகுதி மற்றும் தொலைத்தூரக் கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த “தூய்மை இந்தியா திட்டம்” தற்போது மூன்று வருடங்களை நிறைவடைந்துள்ளது. மக்கள் கழிவறைகளைக் கட்டி பயன்படுத்த வேண்டும் என்றுக் கூறிய அரசு சுத்தமான குடிநீர் வழங்குவதில் எத்தகைய நடவடிக்கைளையும் எடுக்கவில்லை. மேலும், தொலைத்தூரக் கிராமப்புறங்களில் மனிதர்களின் மலத்தை அகற்றும் பணியைக் குறிப்பிட்ட சாதியினர் சேர்ந்தவர்கள்மட்டுமே செய்து வருகிறார்கள்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் திறந்தவெளிகளில் மலத்தை கழிக்கின்றன. குறிப்பாக குடிசை வாழ் பகுதிகள், தொலைத்தூரப் பகுதிகள் மற்றும் பல பள்ளிகளில் சரியான கழிவறை வசதிகள் இல்லை. இவ்வாறு கூறியிருப்பது, 91 சதிவீத மக்கள் கழிப்பறைகளைக் கட்டி உபயோக்கின்றனர் என்று இந்திய சுகாதார சபையின் 2016 மற்றும் 2017 தகவலறிக்கையை தவறு என்று நிரூப்பித்துள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள 33 சதவீத கழிப்பறைகள் மட்டுமே பாதுகாப்பானது மற்றும் 31 சதவீத கழிப்பறைகளால் உடனடியாக நோய் தொற்றுகள் உண்டாகும் அபாயம் உள்ளது. நாட்டில் சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை. 68 சதவீத வயிற்றுப்போக்கு இறப்புகளுக்கு சுகாதாரமற்ற குடிநீரே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தியாவில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியை தீர்க்க தூய்மை இந்தியா திட்டத்திற்கு பயன்படுத்திய லோகோவில் உள்ள காந்தியின் மூக்கு கண்ணாடியில் உள்ள லென்சை மாற்றி மனித உரிமை ஆணையத்தின் லென்சை பொறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமையின் சிறப்பு அறிக்கை இவ்வாறு கூறியிருப்பது, இந்தியாவின் சுகாதாரம் குறித்த அரசின் அனைத்து அறிக்கைகளையும் தவறு என்று எடுத்துரைத்துள்ளது