தெலுங்கானாவில் வேற்றுகிரகவாசியா ?

பரவிய செய்தி

தெலுங்கான வனப்பகுதியில் விசித்திரமான வேற்றுகிரகவாசிகள் சுற்றி வருவதாக பேசப்படுகிறது .

மதிப்பீடு

சுருக்கம்

இது வேற்றுகிரகவாசி அல்ல. louisville, kentucky என்ற பகுதியில் காணப்பட்டதாக கூறி அனைவராலும் பேசப்பட்ட ஆட்டுமனிதன் .

விளக்கம்

   தெலுங்கான மாநிலத்தின் வனப்பகுதிகளில் விசித்திரமான உருவம் கொண்ட வேற்றுகிரகவாசிகள் சுற்றி வருவதாகச் செய்திகள் பல  அனைவராலும் பேசப்படுகிறது . இதைபோல பல பகுதிகளில் வேற்றுகிரகவாசிகள் உலவுவதாக செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு கூறப்படும் செய்திகள் அனைத்தும் வநதந்திகளே .

 வேற்றுகிரவாசி என்று பரவிய படத்தில் இருப்பது ஆட்டுமனிதன் ஆகும். இந்த மிருகத்தின் தலை மற்றும் பின்னங்கால்கள் ஆட்டை போலவும் , செம்மறி ஆட்டை போலவும், உடல் அமைப்பு மனிதனை போலவும் இருக்கும். pope lick creek என்று அழைக்கப்படும் இந்த விசித்திரமிருகம் 1987ல் அமெரிக்க நாட்டின் louisville என்ற பகுதியில் ரயில் சாலைக்கு அருகில் உள்ள trestle பகுதியின் பாலத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது . இதனை பற்றி பல வீடியோ பதிவுகள் உள்ளன .

இந்த மிருகம் அந்தபாலத்தில் செல்லும் வாகனங்களின் மீது தாவி செல்வதாக கூறி அப்பகுதியில் செல்ல அனைவரும் தயங்கினர். அவ்வழியில் செல்பவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது . 1988ல் louisville பகுதியின் இயக்குனர் ஆன Ron schildknecht “The legend of the pope lick monster “ என்ற திரைபடத்தை உருவாக்கினர். படத்தின் பெரும்பாலான பகுதி trestle இடத்தில் எடுக்கப்பட்டது.மேலும் பாதுகாப்பு குறைவு காரணமாக படத்தின் ஒருசில காட்சிகள் வேறு இடத்தில எடுக்கப்பட்டது . இவ்வாறாக ஒரு கதை கூறப்படுகின்றது .

ஆனால் தெலுங்கான பகுதியில் இந்த மிருகம் காணப்படுகின்றது என்பதெல்லாம் முற்றிலும் ஒரு வதந்தி ஆகும் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button