நாசாவில் இன்டர்நெட்டின் வேகம் வினாடிக்கு 91 ஜிகா பைட்டா ?

பரவிய செய்தி

அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசாவில் இன்டர்நெட்டின் வேகம் வினாடிக்கு 91 ஜிகா பைட் ஆகும்.

மதிப்பீடு

சுருக்கம்

நாசா மையத்தின் பணிகளின் போது ஒரு டிஸ்கில் இருந்து மற்றொரு டிஸ்கிற்கு தகவல் பரிமாற்ற வேகமானது வினாடிக்கு 91 ஜிகா பிட்ஸ் என்ற வேகத்தில் இருக்கும்.

விளக்கம்

இன்றைய காலக்கட்டத்தில் இன்டர்நெட் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. அதேபோல், அதன் வேகமும் அதிகரித்த வண்ணமே உள்ளன. உலகளவில் பல நாடுகளில் இன்டர்நெட்டின் வேகம் வெவ்வேறு அளவுகளில் அமைந்திருக்கும். உலகிலேயே தென்கொரியா நாடு இன்டர்நெட் வேகத்தில்(33.5Mps) முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement

எனினும், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் இன்டர்நெட் வேகமானது வினாடிக்கு 91 ஜிகா பைட் அளவிற்கு இருக்கும் என்று பல வலைதளங்களில் கட்டுரைகளாகவும், படங்களாகவும் பதிவிடப்படுகிறது. அதாவது, நாசாவில் பிரத்யேகமாக குழாய்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட நெட்வொர்க்கை பயன்படுத்துவதாகவும், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றின் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது விரயமாகும் நேரத்தை குறைக்க இந்த அதிவேக இன்டர்நெட் நெட்வொர்க்கை பயன்படுத்துவதாகக் கூறி வருகின்றனர்.

ஆனால், நாசா விண்வெளி மையத்தின் தகவல் பரிமாற்ற வேகத்தைப் பற்றி பலரும் தவறாகப் புரிந்த வண்ணம் உள்ளனர். வேக வரம்பைப் பற்றிய முழுவிவரத்தையும் நாசா தனது வலைதளத்தில் தெளிவாக கூறியுள்ளது.

 நாசாவின் சார்பில் தகவல் பரிமாற்ற வேகத்தை சோதிக்கும் முயற்சியில், இரு வேறு டிஸ்குகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற வேகமானது வினாடிக்கு 91 ஜிகா பிட்ஸ் வரை அதிகரித்துள்ளது. இந்த அதிவேக தகவல் பரிமாற்றமானது டென்வர் SC13-ல் இருந்து NASA Goddard space flight center in greenbelt-ல் உள்ள டிஸ்களுக்கு இடையே நிகழ்ந்தது.  உலகிலே அதிகவேக தகவல் பரிமாற்றம் இதுவே ஆகும். விண்வெளியில் இருந்து அனுப்பப்படும் தகவல்கள் பூமியில் நிகழும் காலநிலை மாற்றங்களால் தடைப்படக் கூடாது என்பதற்காக அதிவேக தகவல் பரிமாற்ற முறையை பயன்படுத்துகின்றனர்.

 மேலும் இதன் வேகத்தை அதிகரிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப் போவதாக அத்துறையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். ஆனால், இவ்வகையான தகவல் பரிமாற்ற வேகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவது கடினமாகும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Advertisement

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button