நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள்.

பரவிய செய்தி
நீட் தேர்வின் முடிவுகள் ஹக் செய்யப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
அமெரிக்காவை சேர்ந்த ப்ரிமெட்ரிக் டெஸ்டிங் கம்பெனி நீட் தேர்வின் மென்பொருள் ஹக் செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி போலீசாரிடம் கூறியுள்ளனர்.
விளக்கம்
மருத்துவப் படிப்பிற்கு NEET என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கட்டயமாக்கியது மத்திய அரசு. இந்தியாவில் ஒரே விதமான தேர்வு என்றுக் கூறி நீட்டை அறிமுகம் செய்தனர். மே 7 ஆம் தேதி இந்தியா முழுவதும் 80 மையங்களில் நீட் தேர்வானது நடைபெற்றது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்றுக் கூறி நடைபெற்ற NEET தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக இணையங்களில் செய்திகள் பரவி வருகின்றன. NEET தேர்வை நடத்திய அமெரிக்காவை சேர்ந்த ப்ரிமெட்ரிக் டெஸ்டிங் கம்பெனி தங்களது மென்பொருளை ஹக் செய்திருக்க வாய்ப்புள்ளது என்று டெல்லி காவல்துறையிடம் ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தேர்வில் மாணவர்கள் எளிதாக ஏமாற்றுவதற்கும், மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களை தாங்களே தேர்வு செய்யும் அளவிற்கு பல முறைகேடுகளை நிகழ்த்தியுள்ளனர். இந்த செயல்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டப்படி நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலீசார் கூறுகிறார்கள். மேலும், நொய்டா மற்றும் சண்டிகர் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு உதவிய இரண்டு மேற்பார்வையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் முகவர்கள் மற்றும் துணை முகவர்கள் போன்றவர்களுடன் தொடர்புக் கொண்டுள்ளனர்.
தேர்வு மையங்களை சுற்றியுள்ள இடங்களில் இருந்தே மென்பொருளை ஹக் செய்து மாணவர்களின் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக 20 பக்கங்கள் கொண்ட குற்றவியல் பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மேலும், இந்த செயலில் 30 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதில் பலர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் கைது செய்யப்பட வேண்டும் என்று உயர் அதிகாரியிடம் கேட்டுள்ளனர்.
நீட் தேர்வு அனைவருக்கும் பொதுவானது என்று கூறிவிட்டு தவறான வழிகளில் மாணவர்களை தேர்ச்சிப் பெற வைப்பது மிகப்பெரிய குற்றமாகும். இதனால் பாதிக்கப்படுவது ஏதுமறியா கிராமப்புற மாணவர்களே.