பசுமை நாடுகள் பட்டியலில் கிட்டத்தட்ட கடைசி இடத்தில் இந்தியா!

பரவிய செய்தி

பசுமை நாடுகள் பட்டியலில் 177 வது இடத்தில் இந்தியா. இந்த பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் மட்டுமே உள்ளன.

மதிப்பீடு

சுருக்கம்

2016-ல் வெளியான உலகளாவிய பசுமை நாடுகளுக்கான பட்டியலில் 141 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 177 வது இடத்திற்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளக்கம்

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதைத் தொடர்ந்து ஜனவரி 24-ம் தேதி காற்று மாசு மற்றும் காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய பசுமை நாடுகளுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியல் வெளியாகியது.

Advertisement

இந்த ஆய்வானது, தூய்மையான காற்று, தூய்மையான நீர், காடுகள் அழிப்பு, மீன் வளம், விவசாயம், மீத்தேன், கரியமில வாயு வெளியேற்றம், பல்லுயிர் அழிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட 10 வகையான பிரச்சினைகள் 24 வகையான அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் உலக பொருளாதார அமைப்பால் இணைந்து நடத்தபட்டது.

பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில் இந்தியா 177-வது இடத்தில் உள்ளது. இந்தியா பட்டியலின் இறுதி 5 இடங்களில் இடம்பிடித்துள்ளது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் 141 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 36 இடங்கள் பின்னோக்கி 177 வது இடத்திற்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 ஆசிய நாடுகள் கொண்ட பட்டியலில் பங்களாதேஷை மட்டுமே இந்தியா முந்தியுள்ளது.

இப்பட்டியலில் சுவிட்சர்லாந்து நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து பிரான்ஸ், டென்மார்க், மால்ட்டா, சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான்( 169) மற்றும் சீனா(120) ஆகிய நாடுகள் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

Advertisement

இந்தியாவின் சில பகுதிகளில் வரையறுக்கப்பட்ட காற்று மாசுபாட்டை மீறி காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், பலர் இறப்பதாகவும் Institute for Health Metric And Evaluation  2016 அறிக்கை தெரிவிக்கின்றன.

காடுகளை அழிப்பது, காற்று மாசுபாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் இருப்பது, தொழிற்சாலை கழிவுகள், நீர் மேலாண்மையில் கவனமில்லாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியா பட்டியிலில் இறுதி இடங்களில் உள்ளது.

மேலும், காற்று மாசுபாட்டில்(141), விவசாயத்தில்(125), காடுகள்(68), மீன் வளம்(53),  நீர் மேலாண்மை(107) போன்றவற்றிலும் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button