பஜாஜில் 60,000 ரூபாய்க்கு புதிய ரக கார்களா ?

பரவிய செய்தி

பஜாஜ் நிறுவனத்தில் இருந்து ரூ 60,000 க்கு உலகின் மிகவும் மலிவான காரை பெற இன்றே ஆன்லைனில் முன்பதிவு செய்யுங்கள் .

மதிப்பீடு

சுருக்கம்

குறைந்த விலையில் வாகனங்கள் வெளியிடுவது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் பஜாஜ் நிறுவனம் அறிவிக்கவில்லை .

விளக்கம்

உலகிலேயே மிகக்குறைந்த விலையில் புதிய ரக கார்களை பஜாஜ் நிறுவனம் தயாரித்துள்ளது . ரூ 60,000 விலையுடைய இந்த புதிய ரக கார்கள் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்று புகைப்படங்களும் , வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவுகின்றன . இந்த செய்திகள் அனைத்தும் வதந்திகளே என்று வெளிப்படையாகவே தெரிகிறது .

Advertisement

   பஜாஜ் நிறுவனம் குவாட்ரிசைக்கிள் என்ற புதிய ரக காரை போன்ற சிறிய  நான்கு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளது . RE60 என்று அழைக்கபடும் இந்த புதிய ரக வாகனங்கள் உண்மையில் கார்கள் இல்லை . ஆட்டோரிக்சாகளுக்கு மாற்றாக இந்த RE6௦ வாகனம் களம் இறங்க உள்ளது . காரை போல் தோற்றம் கொண்ட இந்த வாகனம் 3.7 நீளமும் , 500 கி எடை வரை நான்கு பயணிகள் உபயோகிக்கலாம் . மேலும் இதில் 35kmpl மைலேஜ் மற்றும் 70kmph வரையறுக்கப்பட்ட வேகம் உள்ளது .

   ரெனால்ட் மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த புதிய ரக வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தை துவங்கினர் . இவர்களின் நோக்கம்  ஒரு லட்சம் ரூபாய் என்ற குறைந்த விலையில் வாகனங்களை உருவாக்குவது ஆகும் . இந்த திட்டத்தை 2008 ல் ஓர் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தனர் . RE60 என்ற புதிய ரக வாகனங்களுக்கு போட்டி நிறுவனங்களால்  எதிர்ப்புகள் கிளம்பின . அதற்கான காரணம் , RE60 காரை சேர்ந்தது அல்ல , இது இந்திய சாலைகளுக்கு உகந்தது இல்லை என்றும் , சுற்றுப்புறச்சூழலை பாதிக்கும் என்றும் கூறி வருகின்றனர் . இது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது . மேலும் இந்திய சாலைகளுக்கு ஏற்ப RE60 குவாட்ரிசைக்கிள் சட்டப்பூர்வமாக வெளியிடப்படும் என்று பஜாஜ் நிறுவனம் கூறியுள்ளது .

   பஜாஜின் குவாட்ரிசைக்கிள் ரக வாகனமான Q6௦ யானது துருக்கி மற்றும் இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக நீதிமன்றத்தில் பஜாஜ் சார்பில் கூறப்பட்டுள்ளது . இதை அடிப்படை விலையே 1.28 லட்சம் ஆகும் . இப்படி இருக்கையில் 60,000 ரூபாய்க்கு வழங்குவது என்பதெல்லாம் அசாதாரணமானது .

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Advertisement
Please complete the required fields.
ஆதாரம்

Back to top button