பட்டினியால் மக்கள் வாடும் நாடுகளில் இந்தியா 100-வது இடம்.

பரவிய செய்தி

பட்டினியால் மக்கள் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 100-வது இடம் கிடைத்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

சர்வதேச அளவில் பட்டினியால் மக்கள் வாடுகின்ற 119 நாடுகளின் பட்டியலில் இந்தியா 100 இடத்தைப் பிடித்துள்ளது.

விளக்கம்

 2017 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பட்டினி குறியீடு (GLOBEL HUNGER INDEX) படி, பட்டினியால் மக்கள் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்து மிக மோசமான நிலையில் உள்ளது என்று அறிவித்துள்ளது.

Advertisement

ஊட்டச்சத்து, குழந்தை இறப்பு, குழந்தைகளை வீணடித்தல் மற்றும் குழந்தைகளின் முட்டாள்தனம் ஆகிய நான்கு முக்கிய விசயங்களை அடிப்படையாகக் கொண்டது தான் GHI. இவ்வாறு வளரும் நாடுகளில் வாழும் மக்களின் உணவு பற்றாக்குறை, பசியால் வாடுவது தொடர்பான சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFPRI) கணக்கெடுப்பானது இவ்வருடம் நடத்தப்பட்டது. அவர்களின் அறிக்கையின்படி, 119 நாடுகள் கொண்ட GHI அட்டவணையில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.

  இந்தியாவில் ஒரு தீவிர பசிப் பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 97-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆகையால், ஆசிய நாடுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை அடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று தெரிந்துக் கொள்ள முடிகிறது.

 இவ்வருடத்தின் அறிக்கையின்படி, இந்தியாவின் GHI மதிப்பானது 31.4 ஆகும். சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட GHI-யின் மதிப்பானது 9.9-க்கு கீழே இருந்தால் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளனர் என்று அர்த்தம், 10-19.9 மதிப்பானது நடுத்தரமாக உள்ளதைக் குறிக்கிறது, 20-34.9க்கு இடைப்பட்ட மதிப்பானது மிக மோசமான நிலையை குறிக்கிறது, 35-49.9 ஆனது எச்சரிக்கையைக் குறிக்கும் மதிப்பு ஆகும். 50-க்கும் அதிகமானப் புள்ளிகளைப் பெற்ற நாடுகள் இறுதியான எச்சரிக்கையைப் பெறுகின்றன.

இப்பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா(29). நேபாளம்(72), மியான்மர்(77), இலங்கை(84), பங்களாதேஷ்(88), பாகிஸ்தான்(106), ஆப்கானிஸ்தான்(107)-வது இடங்களில் உள்ளன. மேலும், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா போன்ற நாடுகள் பட்டியலில் இறுதியான இடங்களைப் பிடித்து எச்சரிக்கையைப் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் தேசிய ஊட்டச்சத்து சார்ந்தத் திட்டங்களை சரியாக முன்னெடுத்து செல்லாமையும், வறட்சி மற்றும் கட்டமைப்பு சார்ந்த குறைபாட்டால் 2017-ல் ஏழைகள் அதிகளவில் ஊட்டச்சத்து குறைப்பட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று IFPRI இயக்குனர் தெரிவித்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்ய உருவாக்கப்படும் சிறந்தத் திட்டங்களால் மட்டுமே இப்பிரச்சனையை தீர்க்க இயலும்.

Advertisement

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button