பன்றி மரபனுடன் மாட்டின் மரபணுவை கலந்த பன்றி மாடா ?

பரவிய செய்தி
பன்றி மரபனுடன் மாட்டின் மரபணுவை கலந்த பன்றி மாடு. இதன் பாலை கோக்க-கோலா நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனை செய்கின்றது.
மதிப்பீடு
சுருக்கம்
இந்த மாடுகளால் பால் தரவே இயலாது , எவ்வாறு கோக்க-கோலா விற்பனை செய்யும் ..
விளக்கம்
19ம் நூற்றாண்டில் பெல்ஜியமிற்கு பெரும்பாலான மாடுகளை UK வில் இருந்து இறக்குமதி செய்தனர். இதனால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய பெல்ஜியதில் ஓர் அமைப்பை உருவாகினார்கள். அதன் மூலம் மாடுகளை உற்பத்தி செய்ய எண்ணினார்கள். அவர்கள் மரபணு மாற்றப்பட்ட மாடுகளின் மூலம் பால் பொருள்களையும்,இறைச்சியை அதிகமாக பெற நினைத்தனர்.
ஆனால் அதிகபடியான சதைபற்றுடன் கூடிய மாடுகளை மட்டுமே உருவாக்க முடிந்தது ,பால் உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை .இந்த வகை மாடுகளை belgian blue என்று அழைப்பார்கள்.
இந்த வகை மாடுகள் கருப்பு, வெள்ளை பல நிறங்களில் காணப்பட்டன. belgian blue மாடுகள் அதிகபடியான சதைபற்றுடன் தடிமனாக இருந்தாலும் கால்கள் மற்ற மாடுகள் போல் தான் இருந்தன.காளை மாட்டின் எடை 1100kg முதல் 1200kg வரை இருக்கும்,உயரம் 1.45m 1.50m .பசு மாட்டின் எடை 850kg முதல் 900kg வரை ,உயரம் 1.40m .
belgian blue பிறக்கும் போதே சதைபற்றுடன் இருபத்தில்லை 4 முதல் 5 வாரங்களுக்கு பிறகே அத்தகைய வளர்ச்சியை அடைகின்றன.இதன் சதைகள் இயற்கையாக வளரக்கூடியவை . ஒரு குறுப்பிட வயதை அடைந்த பிறகு வளருவதில்லை . இந்த வகை மாடுகள் அதிகப்படியான இறைச்சியை கொடுக்கின்றன.
belgian blue போன்ற மரபணு மாற்றப்பட்ட மாடுகள் கனடா ,பெல்ஜியம், ஐரோப்பா , அமெரிக்கா ,நியூசிலாந்து நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. belgian blue-beef breed புரளியை நிருபிக்க இந்த சான்றே போதுமானது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.