பள்ளி குழந்தைகள் காணாமல் பற்றி வரும் செய்திகள் வதந்தியா ?

பரவிய செய்தி
வேலூரில் இருந்து சுற்றுலா வந்த அரசு பள்ளி மாணவி எங்களிடம் இருக்கிறாள் , இதை அணைவரும் பகிரவும் .
மதிப்பீடு
சுருக்கம்
இது என்ன ஆச்சரியம் காணாமல் போன அனைத்து குழந்தைக்கும் ஒரே பெயர் ஒரே வயது …..
விளக்கம்
சமூக வலைதளங்களில் குழந்தையை காணவில்லை என்று வரும் பல பதிவுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தவை ஆகும். சில சமயங்களில் காணாமல் போன குழந்தையை மீட்கப்பட்ட பிறகும் அக்குழந்தை பற்றிய செய்திகள் பரவிய வண்ணமே உள்ளன. அப்படங்கள் சில உண்மையானவை, பல போலியானவை ஆகும். அவற்றில் ஒன்று தான் இப்படங்களும்.
வேலூரில் இருந்து சுற்றுலா வந்த 5 வயது காயத்ரி என்ற அரசு பள்ளி மாணவி எங்களிடம் இருக்கிறாள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியுள்ளது . இந்த ஒரே செய்தியை வைத்து பல குழந்தைகளின் புகைப்படத்தை மற்றும் மட்டும் மாற்றி ஒரு தவறான செய்தியை பரப்பப்படுகின்றன .
கேவலம் ஒரு விளம்பரத்திற்காக ஒரு சிலர் இத்தகைய செயலை செய்கின்றன . இதுபோன்ற வதந்திகளால் நாம் உண்மையான செய்திகளை கூட கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுவோம் . தவறான செய்திகளை பரப்ப எத்தகையோ செய்திகள் உள்ளன .
இணையத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு என்ற பெயரில் அதிகமான படங்கள் பகிரப்படுகின்றன . இவற்றில் பெரும்பாலனவை முற்றிலும் தவறான வதந்திகளே . ஆனால் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விசயத்தில் இத்தகைய வதந்திகளை பரப்பவேண்டாம் . உண்மையாக குழந்தைகளை இழந்தவர்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். உதவ இயலவில்லை என்றாலும் பரவாயில்லை தவறான செய்தியை பரப்பாதீர்கள் .