பழைய 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா ?

பரவிய செய்தி
பழைய 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மதிப்பீடு
சுருக்கம்
கடந்தாண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த போது எடுக்கப்பட்ட படத்தை போட்டோஷாப் மூலம் மாற்றி வதந்தியை பரப்பி உள்ளனர்.
விளக்கம்
பழைய 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு விரைவில் அறிவிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார். இந்த பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், நாட்டில் சில்லறை தட்டுப்பாடு அதிகளவில் இருந்ததால் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளானார்கள். சில நாட்களுக்கு முன்பு புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் படங்கள் இணையங்களில் வெளியாகி மக்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியது. என்னென்றால், புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வெளிட்டு பழைய 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விடுவார்கள் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் காணப்பட்டன.
ஆனால் இச்செய்திகள் யாவும் உண்மையல்லவே. புதிய நோட்டுகள் வெளியானாலும் பழைய நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து நாட்டில் புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை மக்களின் புழக்கத்திற்காக வெளியிட்டனர். நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் பல வண்ணங்களில் இருப்பது கேளிக்கையாக இருப்பதாக மக்களுக்கள் கூறியுள்ளனர்.
கடந்தாண்டு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அவர்கள் அறிவிக்கும் போது எடுத்த படத்தை போட்டோஷாப் மூலம் மாற்றி பழைய 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வதந்தியை பரப்பியுள்ளனர்.