This article is from Nov 30, 2017

பா.ஜ.க உடன் கமல்ஹாசன் கூட்டணியா ?

பரவிய செய்தி

நடிகர் கமல்ஹாசன் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்றுக் கூறியுள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

தனது கருத்தியலுக்கு தடையாக இல்லாமல் நிர்வாகத்திற்காக மட்டுமே பா.ஜ.கவுடன் ஒத்துழைப்பு அளிக்க முடியும். மாநில நலனை சிந்திக்க வேண்டும். மக்களின் நலனிற்காக இருந்தால், அரசியலில் தீண்டாமை இல்லையென்று கூறியிருந்தார்.

விளக்கம்

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா மற்றும் கலைஞர் அவர்களுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல வியக்கத்தக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியலின் இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் மேலும் பரபரப்பைக் கூட்டும் விதமாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்தார்.

 

     தற்போதைய தமிழகத்தின் ஆட்சியாளர்களின் மீதான எதிர்மறையான கருத்துக்களை தனது ட்வீட்டர் மூலம் தெரிவித்து வந்தார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், எந்தக் கட்சியின் கொள்கையின் மீதும் தமக்கு விரும்பம் இல்லை என்பதால் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும், யாருடனும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லை என்றுக் கூறியிருந்தார். நடிகர் கமல் அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவுகள் தென்பட்டாலும், அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அரசியலில் தீண்டாமைஏதும் இல்லை. மேலும் மாநிலத்தை நிர்வாகம் செய்வதில் பா.ஜ.க ஒத்துழைப்பு அளிக்குமேயானால் இணைந்து செயல்படுவதில் தவறில்லை என்றுக் கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

எனினும் கமல் அவர்கள் கூறிய வார்த்தைகளைத் தவறாக புரிந்துக் கொண்டதின் விளைவால் எதிர்ப்புகள் பல கிளம்பியுள்ளன. அவர் கூறியது என்னவென்றால், பா.ஜ.கவின் வலதுசாரிக் கொள்கைகள் தமக்கு அதிருப்தி அளிப்பதாகவும், தன் கருத்தியலுக்கு தடையாக இல்லாமல் நிர்வாகத்திற்கு மட்டும் பா.ஜ.கவுடன் ஒத்துழைப்பு அளிக்க முடியும். அவர்களுக்கு என் கருத்தியல் ஏற்புடையதாக இருக்குமா என்றுத் தெரியவில்லை, ஆனால் அது மக்களின் நலனுக்காக இருந்தால், அரசியலில் தீண்டாமை இல்லை என்று பொருள்படும்படி கூறியிருந்தார். மக்களின் நலனைத் தரும் செயல்களுக்கு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றுக் கூறினார். ஆனால் பலர் அதைத் தவறாகப் புரிந்துக் கொண்டு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வதந்தியைப் பரப்பியுள்ளனர்.

 கமல் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறும் தமிழ் வார்த்தைகளுக்கே பலருக்கு அர்த்தம் புரியாமல் இருக்கும் நிலையில், தற்போது அவரின் ஆங்கில வார்த்தைகளுக்கும் அர்த்தம் புரியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அரசியலில் ஈடுபட எவருக்கும் உரிமை உண்டு, ஆனால் மகுடம் தறிக்க மக்களால் மட்டுமே முடியும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader