This article is from Jan 06, 2018

பாலைவனமாக இருந்த பகுதியா இப்படி மாறியுள்ளதா ?

பரவிய செய்தி

பாலைவனமாக இருந்த ராஜஸ்தான் மற்றும் குஜராத்திற்கு இடைப்பட்ட தேசிய சாலைகள் இப்பொழுது அழகிய காடுகளாக மாறியுள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காரோ என்ற தீவில் அமைந்துள்ள சாலையை இந்தியாவில் உள்ளது என்று கூறியுள்ளனர் ..

விளக்கம்

காடுகளுக்கு இடையே அமைந்துள்ள சாலைகள் என்று அழகிய தோற்றத்தை கொண்டுள்ள இந்த படமானது வலைதளங்களில் மிகவும் பிரபலமானது . இந்த படத்தில் உள்ள சாலைகள் தங்களது ஊரை சேர்ந்தது  என்ற கூறி பலர் இப்படத்தை பல கதைகளுடன் பதிவிடுகின்றன . எனினும்  , வடநாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக ஒர் புதிய கதையை இப்படத்தை தொடர்புப்படுத்தி உருவாக்கியுள்ளனர் .

2014 ஆண்டில் பதவியேற்ற பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ராஜஸ்தானில் இருந்து குஜராத்திற்கு காரில் பயணம் செய்த போது இந்த பாலைவன சாலைகளின் வழியாக சென்றுள்ளார் . இந்தபகுதியை பார்த்து வேதனை அடைந்த மோடி அவர்களுக்கு ஓர் சிந்தனை தோன்றியது . சாலைகளில் இருபுறமும் மேடுபள்ளங்களாக இருப்பதால் தண்ணீரை தக்கவைத்து கொள்ளும் , எனவே எளிதாக பசுமையாக்கி விடலாம் என்று நினைத்துள்ளார் . அதன்பின் அதிகாரிகளை அழைத்து இரண்டு ஆண்டுகளுக்குள் இப்பகுதி பசுமையாக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார் .

இதை தொடர்ந்து பல லட்ச மரங்கள் நடப்பட்டு , போர்கால நடவடிக்கை மூலம் இப்பகுதிக்கு தண்ணீரை கொண்டு வந்து காடுகளை வளர்க்கும் பணியை தொடங்கினர் . பிரதமர் வெளிநாடுகளில் இருந்தாலும் இந்த காடுகள் வளர்க்கும் முயற்சி எந்த நிலையில் உள்ளது என்று விசாரிப்பார் . மூன்று ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒரு அழகிய காடுகளை உருவாக்கி உள்ளார் . இதற்காக யுனெஸ்கோசான்றிதழ் வழங்கியுள்ளது . இவ்வாறு ஒரு கதையை பல இடங்களில் சிலர் கூறி வருகின்றனர் . இன்னும் பலர் இந்த படமானது எங்கள் ஊரில் உள்ள சாலையில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகளை பதிவிட்டுள்ளனர் .

ஆனால் இந்த காட்டில் உள்ள சாலையானது இந்தியாவிலேயே இல்லை . தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காரோ என்ற தீவில் அமைந்துள்ளது . ஆஸ்திரேலியாவில் சுற்றுள்ள செல்பவர்கள் நீண்ட தூர பயணங்களுக்கு கங்காரோ தீவில் அமைந்துள்ள சாலைகளை தேர்ந்தெடுப்பர் . சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இந்த படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் . இவ்வாறு இருக்கையில் பலர் தங்களது ஊரில் உள்ள சாலை என்று தவறான கதைகளை கூறுவது கேளிக்கையாக உள்ளது .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader