பிரகாஷ்ராஜ் விருதுகளைத் திருப்பி அளிப்பதாகக் கூறினாரா ?

பரவிய செய்தி
பிரதமர் மோடி அவர்கள் தன்னை விடச் சிறந்த நடிகர் என்றும் அவர்கள் எனக்கு வழங்கிய விருதுகளை திருப்பி அளிக்கப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
பிரகாஷ்ராஜ் அவர்கள் அளித்த பேட்டியில், மோடி அவர்கள் என்னை விடச் சிறந்த நடிகர். எனவே அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை அளிக்க வேண்டும் ஆசைப்படுகிறேன் என்று கூறினார். மேலும், தேசிய விருதுகளை திருப்பி அளிக்கும் அளவிற்கு தான் முட்டாள் இல்லை என்றும் கூறியுள்ளார்.
விளக்கம்
பத்திரிக்கையாளரின் கொலையைக் கொண்டாடுவதைப் பற்றி கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடி அவர்கள் என்னை விடச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். மேலும் தனக்கு வழங்கிய தேசிய விருதுகளை அரசிடம் திருப்பி வழங்கத் தயங்க மாட்டேன் என்றுக் கூறியதாக செய்திகள் ஊடங்களிலும், வலைதளங்களிலும் வலம் வருகின்றன.
செப்டம்பர் 5-ம் தேதி பெங்களூரில் மூத்தப் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ்வர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அவரது படுகொலைக்கு கண்டனங்கள் எழுந்தன. பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ்வரின் படுகொலைக்கு அவரின் குடும்ப நண்பரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் கண்டனங்கள் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ்ராஜ், கௌரி லங்கேஷ்வரின் படுகொலையை சிலர் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் மோடியின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். அவர்களின் செயல்பாடுகள் பற்றி கன்னடங்கள் கூறாமல் மௌனமாக இருக்கிறார். இது போன்ற படுகொலைக்கு மோடி அவர்கள் மௌனமாக இருப்பதன் மூலம், என்னை விடச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். நான் ஐந்து முறை தேசிய விருது வாங்கியுள்ளேன். எனினும், என்னை விட மிகச்சிறந்த நடிகரான அவருக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வாறு கூறியதற்காக பிரகாஷ்ராஜ் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஆனால், பிரகாஷ்ராஜ் அவர்கள் தான் பெற்ற தேசிய விருதுகளை திருப்பி அளிக்கப் போவதாக கூறியதாகப் பல ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகின. இதை தெளிவுபடுத்தும் விதத்தில் பிரகாஷ்ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய விருது எனது உழைப்பிற்கு கிடைத்தது. அதை திருப்பி அளிக்க நான் முட்டாள் இல்லை என்றுக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அவர்களுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்றுக் கூறியதை, தனது விருதுகளைத் திருப்பி அளிப்பதாகக் கூறினார் என்று தவறான செய்திகளை பரப்பியுள்ளனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.