பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டு மற்றொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் அமண்டா.

பரவிய செய்தி

தன்னுடைய பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண் ஒருவர் மற்றொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார் .

மதிப்பீடு

சுருக்கம்

பிரசவத்திற்காக வந்த டாக்டர் அமண்டா ஹெஸ்யிடம் மற்றொரு  பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது என செவிலியர்கள் கூறியதை அடுத்து குழந்தையை காப்பாற்றும் செயலில் இறங்கினார்.

விளக்கம்

கென்டுக்கியில் அமைந்துள்ள பிரான்க்போர்ட் பிராந்திய மருத்துவ மையத்தில் டாக்டர் அமண்டா ஹெஸ் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அங்கே அனுமதிக்கப்பட்ட லியா ஹல்லிடே ஜோன்சன் என்ற மற்றொரு பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதால் உடனடியாக பிரசவம் நடைபெற வேண்டும் என்று செவிலியர்கள் கூறியதால் குழந்தையை மீட்க விரைந்தார் டாக்டர் அமண்டா.

Advertisement

அப்பெண் வழியால் அவதிப்பட்டதை தொடர்ந்து, வெளியே சென்றிருந்த மருத்துவர் தகவல் அறிந்து விரைவாக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தார். மருத்துவர் வரும் வரை அப்பெண்ணால் வழியை  தாங்கிக்கொள்ள இயலாது. எனவே நேரத்தை வீணாக்காமல் பிரசவம் பார்த்து விடலாம் என்று டாக்டர் அமண்டா அவர்களிடம் கூறியுள்ளார் .

 தன் உடலை துணியால் மறைத்துக்கொண்டு அப்பெண்ணின் அறைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், பின்னர் பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது என்றும் அமண்டா கூறியுள்ளார்.

இவை அனைத்தும் நடத்த பிறகு அமண்டா ஹெஸ் பிரசவ அறைக்கு சென்று எல்லென் ஜாய்ஸ் என்ற தனது இரண்டாவது குழந்தையை  ஈன்றுள்ளார். இரண்டு தாய்மார்களும் மற்றும் குழந்தைகளும் நலமாக உள்ளனர். டாக்டர் அமண்டா ஹெஸ் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ ஆய்வியல் துறையில் பணிபுரிபவர். மேலும் தனது பிரசவத்திற்காக முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்ததால் இவ்வாறு உதவி செய்ய முடிந்தது என்று கூறினார். இச்சம்பவத்திற்கு பிறகு அமண்டா சிறந்த மருத்துவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Advertisement
Please complete the required fields.
ஆதாரம்

Back to top button