This article is from Nov 16, 2017

பில் கேட்சை பின்னுக்கு தள்ளினாரா அமேசான் நிறுவனர் ஜெப்ப் ?

பரவிய செய்தி

பில் கேட்சை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய பணக்காரராக மாறினார் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப்ப் பெஸாஸ் .

மதிப்பீடு

சுருக்கம்

உலகின் நம்பர் 1 பணக்காரன் என்ற பட்டம் நிலையானது அல்ல.

விளக்கம்

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஒ ஜெப்ப் பெஸாஸ் ஜூலை 27 தேதி அன்று உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் . இவரின் சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்படுகின்றன .

இதனால் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த  பில் கேட்சை பின்னுக்கு தள்ளி உள்ளார் பெஸாஸ் . அன்றைய நாளின் இறுதியில் அமேசான் நிறுவனத்தின் வர்த்தக பங்குகள் மதிப்பு 90.6 பில்லியன் டாலர்களாகவும் , பில்கேட்ஸின் வர்த்தக பங்குகள் மதிப்பு 90 பில்லியன் டாலர்களாகவும் இருந்தன .

இதனை ப்ளூம்பர்க் மற்றும் போர்ப்ஸ் தெரிவித்தது . வியாழக்கிழமை அன்று அமேசான் பங்குகள் 1.6% உயர தொடங்கியதால் பெஸாஸ் சொத்து மதிப்பு  1.7 பில்லியன் டாலர்கள் அதிகரித்தது . பங்குகள் உயர்ந்ததால் அமேசான் நிறுவனத்தின் தலைவர் பெஸாஸ் சிறிது நேரத்திற்கு முதலிடத்தை பிடித்தார் . ஆனால் சில மணி நேரத்தில் அமேசானின் பங்குகள் சரிய தொடங்கியதால் பில்கேட்ஸ் மறுபடியும் முதல் இடத்திற்கு முன்னேறினார் .

சிலமணி நேரத்திற்காவது பெஸாஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருந்துள்ளார் . அவரின் அதிர்ஷ்டத்தை பொறுத்தவரை அமேசான் பங்குகளில் பிணைக்கப்படுள்ளார் . இந்த வாரம் E-commerce juggernaut இன் சந்தை மதிப்பு முதல் முறையாக $500 பில்லியனை தாண்டியது , இவரின் பங்கு மட்டும் 17% ஆகும் .

அமேசானின் வளர்ந்து வரும் பங்குகளின் காரணமாக அவர் கூடிய விரைவில் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக மாறுவதில் சந்தேகம் இல்லை . இருப்பினும், உலகின் பணக்காரர்களில் பட்டியலில் யாரும் நிரந்தரமாக முதல் இடத்தில் இருக்க போவதில்லை .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader