பீமன் மகனின் எலும்பு கூடுகள் குஜராத்தில் கிடைத்ததா ?

பரவிய செய்தி

பீமன் மகனின் இராட்சத எலும்பு கூடுகள் குஜராத்தில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன .

மதிப்பீடு

சுருக்கம்

இப்படங்கள்  worth 1000 என்ற கிராபிக்ஸ் படங்களுக்கான இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

விளக்கம்

மகாபாரத கதையில் வரும் பீமன் அவர்களது மகனின் இராட்சத எலும்பு கூடுகள் என்று கூறி சில புகைப்படங்கள் இணையத்தில் தவறாக பரப்பப்பட்டது . இந்த படங்கள் அனைத்தும் worth 1000 என்ற கிராபிக்ஸ் படங்களுக்கான இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டு தவறான செய்திகளுடன் பரவி வருகின்றது .

Advertisement

டிஜிட்டல் கலைஞர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் பங்கு பெற்ற புகைப்படங்களை அந்த தளத்தில் பதிவிட்டுள்ளனர் . 2002 ஆண்டு archaeological anomalies 2 என்ற புதையுண்ட பொருள்களை எடுப்பது போன்ற கிராபிக்ஸ் புகைப்படங்களுக்கான ஓர் போட்டி நடத்தப்பட்டது . அலியாஸ் இரோன்கிட்டி என்ற கலைஞர் உருவாக்கிய இந்த படம் அந்த போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தது .

கற்பனை திறமையை மையப்படுத்தி போலியான புதையுண்ட பொருள்கள் கிடைப்பது போல் உருவாக்கப்படவேண்டும் என்று போட்டி நிகழ்ந்துள்ளது . இதில் யாரும் தங்கள் உண்மையான பெயரை உபயோகிக்கவில்லை . இந்த படங்கள் உலகம் முழுவதும் இணையத்தின் மூலம் சென்றுள்ளது .

பல வருடங்களாக இது போன்ற படங்களை பயன்படுத்தி ராட்சசர்களின் எலும்பு கூடுகள் கிடைத்துள்ளன என்று செய்திகளை விடாமல் பரப்பி வருகின்றன . சிறுவயதில் இருந்து நாம் கேட்டறிந்த பல புராண கதைகளில் வருகின்ற அரக்கர்கள் , மிகப்பெரிய உருவம் கொண்டவர்கள் போன்ற கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக இந்த படங்கள் உள்ளது .

எனவே கற்பனைக்கு ஏற்றார் போல் உள்ளதால் இரண்டையும் தொடர்புப்படுத்தி வதந்திகளை பரப்புகின்றன . குஜராத்தில் தோண்டி எடுக்கப்பட்டது என்று கூறியது போல் பல நாடுகளில் பல கதைகளாக இந்த படங்கள் வளம் வருகின்றன .

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Advertisement

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button