புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதையால் நிகழும் விபத்துகள்.

பரவிய செய்தி

2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட புத்தாண்டில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 1-ம் தேதி காலை வரையில் போதை மற்றும் கவனக்குறைவால் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர், 593 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸ் நடத்தினால், பாஸ்போர்ட் எடுப்பதில் சிக்கல் வரும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

விளக்கம்

புத்தாண்டு என்றாலே போதை பொருட்கள் பயன்படுத்துவது வழக்கமாகவே இருக்கிறது. புத்தாண்டு இரவில் நன்றாக குடித்து விட்டு சென்னை மெரினா மற்றும் பாண்டிச்சேரி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வது, சாகசங்கள் என்ற பெயரில் பைக் ரேஸ் செய்வது என்று பலரை அச்சுறுத்தும் செயலை செய்கிறனர். குடித்து விட்டு செய்யும் செயல்களால் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வீதிகளில் நடைபோடும் பொது மக்களுக்கும் கூட அதிகளவில் இடையூறுகள் ஏற்படுகின்றன.

Advertisement

போதையில் இருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படுவது மட்டுமின்றி தடுமாற்றங்களால் விபத்தில் சிக்கி பலர் பரிதாபமாக உயிரிழகின்றன. கடந்த ஆண்டுகளில் சென்னையில் மட்டும் புத்தாண்டு இரவுகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பட்டியலை பார்த்தால், யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

   ” புத்தாண்டு தொடக்கமான டிசம்பர் 31 இரவு முதல் ஜனவரி 1 காலை வரையில் 2013-2014-ல் 5 பேர் இறந்தனர் 119 காயமடைந்தனர், 2014-2015-ல்  5 மரணங்கள்  58 பேர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்தது, 2015-2016-ல் 4 பேர் இறந்தனர் 296 படுகாயம். சென்ற ஆண்டில் மட்டும்  5 பேர் உயிரிழந்தனர் 120 படுகாயமடைந்தனர். இவை சென்னையின் நிலவரம் மட்டுமே. இது ஒருபுறம் இருக்கையில் கொண்டாட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காதவாறு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன “.

புத்தாண்டு இரவில் நிகழும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு, புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸ் நடத்தினால் பாஸ்போர்ட் எடுப்பதில் சிக்கல் வரும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே, பிறக்கவிருக்கும் புத்தாண்டில் நலமோடு இருக்க குடி போன்ற போதையை தவிர்த்து, நிதானமாக வாகனங்களில் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button