பேருந்து ஓட்டுனராகப் பணிபுரிந்தவர் தற்போது ஐ.பி.எஸ் அதிகாரி.

பரவிய செய்தி

சென்னை SSN கல்லூரில் பேருந்து ஓட்டுனராகப் பணிபுரிந்து, கல்லூரி நூலகத்தில் படித்து யூ.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிப் பெற்று ஐ.பி.எஸ்-க்கு நேரடியாகத் தேர்வாகி எஸ்.பி ஆக பணியாற்றி வருகிறார் திரு.சிவசுப்ரமணி அவர்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

சென்னை தனியார் பொறியியல் கல்லூரியின் மாணவர்களுக்கான பேருந்து ஓட்டுனராக இருந்த சிவசுப்ரமணி ஐ.பி.எஸ் அதிகாரி ஆகியுள்ளார். 2010-ம் ஆண்டு பேட்ச் பிரிவில், ஒரிசாவில் பயிற்சி பெற்று ஏ.எஸ்.பி ஆக பணியாற்றி வந்தார். தற்போது ராயகடா மாவட்ட எஸ்.பியாகப் பணியாற்றி வருகின்றார்.

விளக்கம்

திரு.சிவசுப்ரமணி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேமூர் கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை தமிழ்வழிக் கல்வியில் பயின்ற சிவசுப்ரமணி, பின்னர் தொழிற்கல்வியை முடித்துள்ளார். தனது நண்பர்களுடன் இணைந்து லாரி மற்றும் பேருந்துகளின் பணிமனையைத் தொடங்கினார். அதன் பிறகு சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியில் பேருந்துகளைப் பராமரிக்கும் பணியுடன், ஓட்டுனராகவும் வேலை செய்து வந்தார்.

Advertisement

1999 ஆம் ஆண்டு தன் உறவினர் ஒருவர் யூ.பி.எஸ்.சி தேர்வில் பெற்றுதை “ விவசாயின் மகன் ” என்ற கட்டுரையில் படித்த சிவசுப்ரமணிக்கு அரசு அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. பேருந்து ஒட்டும் நேரம் போக கிடைத்த நேரங்களில் கல்லூரில் உள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்து வந்துள்ளார். எனினும், யூ.பி.எஸ்.சி தேர்வை எழுத பட்டப்படிப்பு வேண்டும் என்ற காரணத்தினால் தனது கிராமத்திற்கே சென்று விவசாயம் செய்துக் கொண்டே அஞ்சல் வழியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

பல்வேறு அரசு பணிகளுக்கும், வங்கிப் பணிகளுக்கான தகுதித் தேர்வுகளை முயற்சித்துள்ளார். ஆனால், எதிலும் வெற்றிக் கிடைக்கவில்லை. இருப்பினும் விடமால் ஆறு முறை யூ.பி.எஸ்.சி தேர்வை முயற்சித்து இறுதியாக வெற்றிப் பெற்று ஐ.பி.எஸ் ஆகியுள்ளார். தனியார் பயிற்சி நிலையங்களில் படித்தால் மட்டுமே யூ.பி.எஸ்.சி போன்ற தேர்வுகளில் வெற்றிப் பெற முடியும் என்பதில்லை என்றும், தேர்விற்கு தயாராகும் நண்பர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு தீர்த்துக் கொண்டதாக சிவசுப்ரமணி அவர்கள் கூறியுள்ளார்.

பயிற்சி பெற்றப் பிறகு ஒடிசா மாநிலத்தின் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நியமிக்கப்பட்டது அவருக்கு மகிழ்ச்சியை அளித்ததாகக் கூறியுள்ளார். வாழ்க்கையில் உயர நினைத்தால் இடமோ, சூழலோ, பணமோ தடை இல்லை, கடுமையான உழைப்பிருந்தால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பதற்கு திரு.சிவசுப்ரமணி ஐ.பி.எஸ் உதாரணம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Advertisement
Please complete the required fields.
ஆதாரம்

Back to top button