மால்வேர் தாக்குதலால் பிஎஸ்என்எல் மோடம்கள் பாதிப்பு.

பரவிய செய்தி

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் மோடம்களை மால்வேர் தாக்குதல் நடத்தியுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் 200 க்கும் மேற்பட்ட பிராட்பேண்ட் மோடம்கள் பாதிக்கப்பட்டுள்ளன . இந்த மால்வேர் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள வாடிக்கையாளர்கள் தங்களது பாஸ்வோர்டை மாற்றி அமைக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

மால்வேர் தாக்குதலால் 2000 க்கும் மேற்பட்ட  பிராட்பேண்ட் மோடம்கள் பாதிக்கப்பட்டுள்ளன , எனவே பாஸ்வோர்டை மாற்றி அமைக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது பிஎஸ்என்எல் .

விளக்கம்

பிஎஸ்என்எல்  பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது . ஜூலை 30  2017 இல் மால்வேர் தாக்குதலால் 2000 க்கும் மேற்ப்பட்ட பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் மோடம்கள் பாதிக்கப்பட்டுள்ளது . அவர்களின் பாஸ்வோர்ட்களை நிறுவனம் மாற்றவில்லை , தாக்குதலால் ஏற்பட்டு இருக்கலாம் . ஆதலால் வாடிக்கையாளர்கள் தங்களது இயல்புநிலை பாஸ்வோர்டை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கி உள்ளார் பிஎஸ்என்எல் தலைவர் அனுபிரம் ஸ்ரீவாஸ்தவா .

பிஎஸ்என்எல்லின் முக்கிய நெட்வொர்க் , பில்லிங் , தகவல்கள் மற்றும் வேறு எந்த ஒரு அமைப்பையும் மால்வேர் தாக்கவில்லை . உடனடியாக வாடிக்கையாளர்கள் தங்கள் பாஸ்வோர்ட்களை மாற்ற மட்டுமே அறிவுரை வழங்கினோம் தவிர பிராட்பேண்ட் பற்றி கவலைப்பட தேவை இல்லை என்றும் கூறியுள்ளார் .

மால்வேர் தாக்குதலின் போது பயனாளர்களின் பாஸ்வோர்ட்களை மாற்றியதால் , அந்த மோடம்ககளால் உள்நுழைய முடியவில்லை . இயல்புநிலை பாஸ்வோர்டை மாற்றினால் எப்பொழுதும் உபயோகிக்கலாம் .  பிஎஸ்என்எல் அழைப்பு மையங்களை முன்னெடுத்து செல்லும் நோக்கத்தில் பயனாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுவதாக அனுபிரம் ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார் .

அணைத்து தகவல்கலும் கணினிமயம் ஆக்கப்பட்டதால் அவற்றை எடுக்க இதுபோன்ற செயல்களை செய்கின்றன . தகவல் விவரங்களை திருடவே இது போன்ற தாக்குதல்கள் பெரும்பாலும் நடைபெறுவதால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது .

இணைய பயன்பாடு அதிகமாக காணப்படுவதால் வைரஸ் போன்றவற்றின் மூலம் தாக்கி தகவல்களை எடுக்க பார்க்கின்றனர் . எனவே தேவை இல்லாத குறுந்தகவல்கள் வந்தால் அவற்றை திறந்து பார்க்க வேண்டாம் .

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button