This article is from Nov 11, 2017

மீராகுமார் ராஜீவ்காந்தி வீட்டில் பணிபுரிந்தவரா ?

பரவிய செய்தி

குடியரசுத்தலைவர் வேட்பாளரான மீரா குமார் ராஜீவ்காந்தி வீட்டில் வேலை செய்தவர் என்பது உங்களுக்கு எத்தனை பெயருக்கு தெரியும் .

மதிப்பீடு

சுருக்கம்

வக்கீலுக்கு படித்தவரை ராஜீவ்காந்தி வீட்டில் பணிபுரிந்தவர் என்று கூறுவது நியாயமா !!!

விளக்கம்

ஜூலை 2017 ல் நடந்த இந்தியா குடியரசுத்தலைவர் பதவிக்காக தேர்தல் நடைபெற்றது . இதில் ஆளும் பிஜேபி கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டார் , எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் மீரா குமார் . இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் , அரசியல்வாதிகள் , நன்கு படித்த வழக்கறிஞர்கள் என இவர்களுக்குள் பல ஒற்றுமைகள் காணப்பட்டன .

 பீகாரில் ஆராஹ் மாவட்டத்தில் பிறந்தவர் மீரா குமார் . இவரது தந்தை ஜக்ஜீவன் ராம் அவர்கள் பிரதான தலித் தலைவர் , இவர் இந்தியாவின் துணை பிரதம மந்திரியாக பணியாற்றியவர் . இவரின் தாய் இந்த்ராணி தேவி சுதந்திர போராட்ட போராளி ஆவார் .

மீரா குமார் சட்டப் படிப்பு மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் . அவர் 1973 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுசேவையில் இணைந்தார் , அதன்பின் ஸ்பெயின் , மொரீஷியஸ் , ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் தூதரகங்களில் பணிபுரிந்தவர் .

1985 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்த மீரா குமார் , உத்திரப்பிரதேசம் பிஜினுரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . அன்றைய காலகட்டத்தில் ராம்விலாஸ் பாஸ்வான் , மாயாவதி போன்ற மிகப்பெரிய தலித் தலைவர்களை தோற்கடித்தார் . 2009 இல் மன்மோகன் சிங்க் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் நீர்வள துறை அமைச்சராக பதவி ஏற்றார் . அதன் பின் லோக் சபாவின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

இதனால் இந்திய நாட்டின் முதல் பெண் சபாநாயகர் ஆனார் மீரா குமார் . இவ்வருடம் நடந்த குடியரசுத்தலைவர் தலைவர் தேர்தலில் 35 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாலும் , எதிர் அணியில் இதுவரை யாரும் இவ்வளவு வாக்குகள் பெற்றது இல்லை . அத்தகைய சாதனை படைத்தவர் . அவரை ராஜீவ்காந்தி வீட்டில் பணிபுரிந்தவர் என்று தவறாக செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் . இது அவரை இழிவுப்படுத்த சிலர் செய்யும் காரியங்கள் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader