ரான்சம்வேர் வைரஸை பரவாமல் தடுத்தவர் கைது.

பரவிய செய்தி
வான்னாக்ரை ரான்சம்வேர் வைரஸை பரவாமல் தடுத்த மார்கஸ் ஹட்சின்ஸ் என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் .
மதிப்பீடு
சுருக்கம்
இவர் 2014 ல் உருவாக்கிய மால்வேரால் வங்கி கணக்குகளில் இருந்து பணங்கள் திருடப்பட்டிருக்கிறது . எனவே மார்கஸ் FBI ஆல் கைதாகினார் .
விளக்கம்
சில மாதங்களுக்கு முன்பு உலகையே அச்சுறுத்தியது தான் வான்னாக்ரை என்ற ரான்சம்வேர் தாக்குதல் . இது கணினிகளைத் தாக்கி தீங்கு ஏற்படுத்தும் ஒருவகையான மால்வேர் ஆகும் . ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்திய வரை மொத்தம் 150 நாடுகளை ரான்சம்வேர் தாக்கியது .
இதுவரை நடந்த மால்வேர் தாக்குதலில் ரான்சம்வேர் தாக்குதல் தான் மோசமானது என்று கூறியுள்ளனர் . இமெயில் மூலமாக பரவிய இந்த வைரஸ் கணினியின் தகவல்களை என்க்ரிப்ட் செய்து விடும் . தகவல்களை திரும்ப பெற வேண்டும் என்றால் அதைப் பரப்பிய ஹேக்கர்களுக்கு பிட்காயின் மூலமாக பணம் செலுத்த வேண்டும் .
இப்படி நடந்து கொண்டு இருக்கையில் இந்த வான்னாக்ரை ரான்சம்வேர் தாக்குதலை தடுக்க மார்கஸ் ஹட்சின்ஸ் என்பவர் உதவி செய்துள்ளார் . 23 வயதான மார்கஸ் ஹட்சின்ஸ் இங்கிலாந்தில் மால்வேர்டெக் என்ற இணையத்தளத்தை நடத்தி வருகின்றார் . இவரால் தான் வான்னாக்ரை ரான்சம்வேர் மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டது . அந்த மால்வேரில் 23 கேரக்டர்களை கொண்ட இணையதள முகவரி அக்டிவேட் செய்யப்பட்டால் ரான்சம்வேர் மேலும் பரவாமல் இருக்கும் என்ற கோட் ஒன்று உள்ளது என்பதை கண்டறிந்துள்ளார் . எனவே அந்த தளத்தை தனது பெயரில் பதிவு செய்து அக்டிவேட் செய்தார் . இதனால் ரான்சம்வேர் மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டது . உலகம் முழுவதும் உள்ள பலர் இவருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர் .
இப்படி இருக்கையில் , மார்கஸ் அமெரிக்காவில் நடந்த சைபர் கருத்தரங்கத்திற்கு சென்று திரும்புகையில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார் . க்ரோனாஸ் என்ற வங்கியை தாக்கும் மால்வேரை 2014 ல் தயாரித்து ஒருவரிடம் விற்றுள்ளார் . அவர் கள்ள சந்தையில் வேறொருவரிடம் விற்றுள்ளார் . இந்த மால்வேரால் 2014 ல் வங்கி கணக்குகளில் இருந்து பணங்கள் திருடப்பட்டிருக்கிறது . எனவே FBI ஆல் மார்கஸ் கைது செய்யப்பட்டுள்ளார் .