ரோஹிங்யா முஸ்லிம் பிரிவில் 10 வயது குழந்தை கர்ப்பமா ?

பரவிய செய்தி

மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம் பிரிவில் 10 வயதில் கர்ப்பமாக இருக்கும் குழந்தையின் புகைப்படம்.

மதிப்பீடு

சுருக்கம்

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 12 வயது குழந்தையின் படத்தைப் பயன்படுத்தி ரோஹிங்யா முஸ்லிம் குழந்தை என்று தவறான கதையை உருவாக்கியுள்ளனர்.

விளக்கம்

 மியான்மர் நாட்டில் வசிக்கும் ரோஹிங்யா முஸ்லிம் இன  மக்களில் 10வயதுடைய குழந்தை கர்ப்பமாக இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் வெளியான படங்கள் அனைத்தும் தவறாக சித்தரிக்கபட்டவையே.

Advertisement

  1989 வரை பர்மா என்றழைக்கப்பட்ட நாடு பின் நாளில் ஒன்றிணைத்த மியான்மர் தேசமாக மாறியது. அந்நாட்டில் உள்ள பெளத்த மதமக்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம் இன மக்களுக்கும் இனவாத பிரச்சனை எழுந்தது. குறிப்பாக 1990களில் முஸ்லிம் மக்கள்மீதான தாக்குதல் தீவிரமடைந்தது. பல ஆண்டுகளாக மியான்மர் நாட்டின் முஸ்லிம் இன மக்களின் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வந்தன. இதில் 29,000 முஸ்லிம்கள் பங்களாதேஷ் நாட்டில் தஞ்சமடைந்தனர்.

  2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜனநாயக ஆட்சிக்கு மாறியப் போதிலும் மியான்மரில் இனவாத தாக்குதல்கள் அதிகரித்தன. குறிப்பாக இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் ரக்கைன் மாநிலத்தில் வாழ்ந்து வந்த ரோஹிங்யா என்ற சிறுபான்மை முஸ்லிம் இன மக்களின் மீது புத்த மதத்தினர் நடத்திய தாக்குதலால் பலர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு படகுகளில் தப்பித்தனர்.

  இவ்வாறு இனவாத தாக்குதல்கள் நடைபெறும் நேரத்தில் ரோஹிங்யா முஸ்லிம் இன மக்கள் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கபட்டு வருகிறார்கள். ரோஹிங்யா முஸ்லிம் இன மக்களின் தாக்குதலை தடுக்கவே அவர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறுவதாக வதந்திகள் பரவி வருகின்றன.

  rohingya muslim

   குறிப்பாக மியான்மரில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம் இன மக்களில் 10 வயதுடைய குழந்தை கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அம்மக்களின் மீதான தவறானக் கண்ணோட்டத்தை உருவாக்க எண்ணியுள்ளனர். எனவே வயிறு பெரிதாக இருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படத்தைப் பயன்படுத்தி தவறான செய்திகளை பரவியுள்ளனர்.

 உண்மையில் இப்படத்தில் இருக்கும் குழந்தை மியான்மரை சேர்ந்தவள் அல்ல. இக்குழந்தை போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மேனினா என்ற 12 வயது சிறுமி. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வயிறானது மிகவும் பெரிதாக வீங்கியுள்ளது. அதன் தொடர்பான சிகிச்சையைப் பெற்று வரும் அக்குழந்தையின் படங்கள் இணையத்தில் அந்நாட்டில் வெளியாகின.

Advertisement

  நோயால் பாதித்தக் குழந்தையின் படத்தைப் பயன்படுத்தி ரோஹிங்யா மக்களின் மீதான தவறான எண்ணத்தை உருவாக்க நினைத்துள்ளனர். குழந்தையின் படத்தை தவறாகப் பயன்படுத்துவது இழிவான செயல் என்று அறிந்தும் இம்மாதிரியான செயல்களை செய்கின்றனர். இறுதியாக, இவை அனைத்தும் தவறான எண்ணத்துடன் உருவாக்கிய கதைகள் என்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button