லஞ்சத்தில் இந்தியா முதல் இடம்.

பரவிய செய்தி

ஆசிய நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிகம் லஞ்சம் கொடுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

ஆசியாவின் 16 நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் மற்றும் ஊழல் என்ற கருத்துக்கணிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது …

விளக்கம்

தற்போது இந்தியாவை ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நோக்கம் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவது ஆகும் . இப்படி இருக்கையில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் அண்டி கரப்ஷன் குளோபல் சிவில் சொசைட்டி ஆர்கனிசெசன் இணைந்து ஆசியாவில் உள்ள  16 நாடுகளில் லஞ்சம் கொடுப்பதை பற்றி கருத்துக்கணிப்பை நடத்தினர் . இந்த கருத்துக்கணிப்பில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது என்று கூறியுள்ளனர் .

Advertisement

இந்தியாவில் 10 இல் 7 பேர் அரசின் பொது சேவைகளை மக்கள் பெற லஞ்சம் கொடுக்க வைப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது . இந்த கருத்துக்கணிப்பில் ஜப்பானில் மிககுறைவாக 0.2 சதவிகிதம் மக்களே சேவைகளுக்கு லஞ்சம் கொடுக்கின்றன .

இந்தியா மற்றும் சீனா போன்ற மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் பொதுசேவையை பெற லஞ்சம் கொடுக்கப்படுகிறது . இரு குழுக்களும் மக்கள் மற்றும் ஊழல் என்ற தலைப்பில் ஆசிய நாடுகளில் 2200 நபர்களிடம்  கருத்துக்கணிப்பை நடத்தினர் .

அனைத்து நாடுகளில், இந்தியாவில் மட்டும் பள்ளிகளில் 58 சதவிகிதமும் , மருத்துவமனைகளில் 59 சதவிகிதமும் லஞ்சம் வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது . கடந்த முறை நடத்திய கருத்துக்கணிப்பில் 41% பெற்று 7வது இடத்தில் இந்தியா இருந்தது . இப்பொழுது பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா , மியான்மர் , இலங்கை போன்ற நாடுகளை விட அதிகரித்து உள்ளது .

பொது சேவைகளில் அதிக அளவு லஞ்சங்கள் காவல் துறையில் வழங்கப்படுவதாக மக்கள் கூறியுள்ளனர் . காவல் உள்பட பொது சேவை நிறுவனங்களுக்கு லஞ்சம் பணமாகவோ , பொருளாகவோ வாங்கப்படுகின்றன . இந்த கருத்துக்கணிப்பு குழுத் தலைவர் இல்ஹாம் முஹம்மத் கூறுகையில் இது போன்று பொது சேவைகளுக்கு மக்கள் லஞ்சங்கள் வழங்குவது தவறானது . இதனால் பொது சேவைகளான சுகாதாரம் , கல்வி , சட்டம் ஒழுங்கு போன்றவை பாதிக்கப்படும் என்று கூறினார் .

இந்தியாவை பொறுத்தவரை லஞ்சம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது . லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு பொது சேவையையும் பெற இயலாது என்பதை இந்த கருத்துக்கணிப்பு உணர்த்தியுள்ளது .

Advertisement
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button