This article is from Nov 11, 2017

லைக் , ஷேர் செய்தால் செல்போன் ஸ்க்ரீனில் பாம்பு ஓடுமா ?

பரவிய செய்தி

இந்த படத்தை லைக் செய்து , ஷேர் செய்து , கமெண்ட்டில் snake run என்று டைப் செய்தால் உங்கள் செல்போன் ஸ்க்ரீனில் இதுபோன்று பாம்பு ஓடும் அதிசியம் . முயற்சி செய்து பாருங்கள் .

மதிப்பீடு

சுருக்கம்

செயலிக்கும் (app ) , வதந்திக்கும் வித்தியாசம் கூடவா தெரியாது .

விளக்கம்

 இன்று பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்படும் செய்தி இதுதான் . உங்கள் செல்போனில் இதுபோன்று பாம்பு ஓடவேண்டும் என்றால் , இந்த படத்தை லைக் செய்து , ஷேர் செய்து , கமெண்ட்டில் snake run என்று டைப் செய்தால் உங்கள் செல்போன் ஸ்க்ரீனில் பாம்பு ஓடுவதை பார்க்கலாம் .

இன்றும் நம் இளைஞர்கள் வெகுளித்தனமாக உள்ளனர் என்பதுக்கு இது போன்ற செயலை செய்து நிரூபிக்கின்றன. ஒரு படத்தை ஷேர் செய்வதால் எவ்வாறு இது போன்று நடக்கும் சொல்லுங்கள் பார்போம் .

அப்படி என்றால் பாம்பு எப்படி ஓடுகிறது என்று சிலர் கேட்கத்தான் செய்வார்கள் . இது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  செயலி (app) ஆகும் . இதை போல் பல வகையான செயலிகளை உருவாக்கி பயன்பாட்டிற்கு களமிறக்கி உள்ளனர் .

பாம்பு ஓடுவது , குரங்கு தாவுவது , பூனை ஒளிந்து கொள்வது போன்று பல வகையானவை அடங்கிய செயலி உள்ளது . இது புரியாமல் சிறுபிள்ளை தனமாக ஷேர் , லைக் , கமெண்ட் செய்து கொண்டு இருகின்றார்கள் .

இது போன்ற பல தவறான பதிவுகளை பேஸ்புக்கில் பார்க்கலாம் . உதாரணத்திற்கு கமெண்ட்டில் ஒன்று என்று டைப் செய்துவிட்டு படத்தை பாருங்கள் ஒரு உருவம் தெரியும் , இந்த படத்தை லைக் செய்து , ஷேர் செய்யுங்கள் உங்கள் இன்பாக்ஸ்க்கு அந்தப்படம் தானாக வரும் , இந்த கடவுள் படத்தை ஷேர் செய்தால் நல்ல நடக்கும் , இந்த படத்தை 10 நபர்களுக்கு அனுப்பினால் உங்களுக்கு பணம் வரும் , இலவச நெட் கிடைக்கும் . இது போன்ற பல செய்திகளை நம்பி எதையும் ஷேர் செய்யாதிர்கள் .

Please complete the required fields.




Back to top button
loader