விசாகப்பட்டினத்தில் வேற்றுகிரகவாசியா ?

பரவிய செய்தி

விசாகப்பட்டினத்தில் வேற்றுகிரகவாசிகளின் நடமாட்டம் இருப்பதை மக்கள் நேரில் பார்த்துள்ளனர். மேலும், அதை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

வேற்றுகிரகவாசி, ஏலியன்கள் என்றுக் கூறிய வீடியோவில் இருப்பது Barn Owl என்ற ஒரு வகை ஆந்தை ஆகும். பாழடைந்தப் பகுதிகளில் அதிகம் காணப்படும் இவ்வகை ஆந்தைகளை ஏலியன் என்று வதந்தியைப் பரப்பியுள்ளனர்.

விளக்கம்

விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் மூன்று ஆந்தைகளை பார்த்த மக்கள் அதை ஏலியன் என்று நினைத்து போட்டோ மற்றும் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த நேரு விலங்கியல் பூங்காவின் அதிகாரி கூறுகையில், இது Barn Owl என்ற அரிதான ஒரு வகை ஆந்தை இனம் ஆகும். இவை மத்திய இந்தியாவில் அதிகம் காணப்படும். மேலும், இதன் சிறப்பே இதய வடியில் உள்ள முகமே. இந்த வகை ஆந்தைகள் நிமிர்ந்து நிற்கும் திறனுடையவை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

    கட்டுமானப் பகுதியில் கிடைத்த ஆந்தைகளை சோதித்த விலங்குநல மருத்துவர் கூறுகையில், இந்த மூன்று ஆந்தைகளும் சிறிய குஞ்சுகள் ஆகும். இவைகளுக்கு நீளமான கால்கள் இருக்கின்றன. தாய் ஆந்தையானது உணவு கொண்டு வரும் என்று இக்குஞ்சுகள் எதிர்பார்த்து அவ்விடத்தை சுற்றி வந்துள்ளன. இதனால், குஞ்சுகளுக்கு தோலில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Barn owl வகை ஆந்தைகள் இந்தியா மற்றுமின்றி உலகின் பல நாடுகளில் காணப்படுகின்றது. இது Tytonidae என்ற குடும்பத்தைச் சார்ந்தவை . இவ்வகை ஆந்தைகள் 430 முதல்  620 கிராம் எடையும்,  32 முதல்  40 செ.மீ நீளமும் கொண்டவை.

இவை பெரும்பாலும் பாழடைந்த கட்டிடங்கள், பழைய கோட்டைகள், கிணறுகள் போன்றவற்றில் பதுங்கி வாழ்பவை. சிட்டுக்குருவி, எலி, சுண்டெலி ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும்.

கட்டுமானப் பணிகள் நடைபெற்ற கட்டிடத்தில் இருந்த ஆந்தை குஞ்சுகளை ஏலியன் என்று நினைத்து zoom செய்து வீடியோ பதிவு செய்ததால் பார்பதற்கு விசித்திரமாக இருந்த காரணத்தினால் இச்செய்தி அதிகளவில் வைரலாகியது.

Advertisement
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button