This article is from Oct 11, 2017

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியுமா ?

பரவிய செய்தி

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் நம் கண்களுக்கு நன்றாக தெரியும். மேலும் அதன் வடிவம் ஒரு டிராகன் போன்று காட்சியளிக்கும்.

மதிப்பீடு

விளக்கம்

    சீனப்பெருஞ்சுவர் மனிதனால் 21,219 கி.மீ தொலைவிற்கு கட்டப்பட்ட ஓர் சிறந்த கட்டமைப்பு ஆகும் . இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை . இதை விண்வெளியில் இருந்து பார்க்க இயலும் என்பது அவர்களின் நம்பிக்கை .

ஆனால் அது உண்மை அல்ல , விண்வெளியில் இருந்து நம்மால் சீனப்பெருஞ்சுவரை காண இயலாது . விண்வெளி மையங்களில் இருந்து தெளிவாக தெரிவதில்லை என்று விண்வெளி வீரர்கள் கூறியுள்ளனர் . கனேடிய விண்வெளி வீரர் கிறிஸ் 2013 ல் ஐந்து மாதங்கள் விண்வெளியில் கழித்தார் . அதன் பின் அவர் சீனப்பெருஞ்சுவர் பற்றி கூறுகையில் சுற்றுப்  பாதையில் பார்க்கக்கூடியது அல்ல மற்றும் இயற்கை மாற்றங்கள் , நிறங்கள் காணப்படுகின்றன என்றுள்ளார் .

சீனாவின் முதல் விண்வெளி வீரர் யாங் லிவி 2003 ஆண்டு விண்வெளிக்கு சென்றார் . வரலாற்று சிறப்புமிக்க சீனப்பெருஞ்சுவரை விண்வெளியில் இருந்து பார்க்க இயலவில்லை என்றுள்ளார் . நாம் படித்து வந்த புத்தகங்களில் உள்ள வார்த்தைகளை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சீனப்பெருஞ்சுவர் கம்பீரமானது ஆனால் அதை பார்க்க இயலாது . 2004 ஆண்டு லென்சை பயன்படுத்தி சீனப்பெருஞ்சுவரை அமெரிக்க விண்வெளி வீரர் லிராய் சாவோ எடுத்துக்கொண்டதாக நாசா உறுதிப்படுத்தி உள்ளது . மேலும் 180mm ஜிம் லென்ஸ் உடன் எடுத்த பெருஞ்சுவர் படத்தை இணையத்தில் காணலாம் .

விண்வெளியில் இருந்து பெருஞ்சுவரை பார்க்க முடியாம என்ற கேள்விக்கு பருவநிலை மாற்றம் , வடிவம் , அமைப்பு , உபயோகிக்கும் கேமரா இவற்றை பொறுத்தே பதில் அமையும் என்றுள்ளனர் விண்வெளி வீரர்கள் . ஆனால் ரேடார் பதிவுகளின் மூலம் கிடைக்கும் புகைப்படத்தில் பார்க்க இயலும் என்று நிரூபித்துள்ளனர் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader