வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கிய எம்எல்ஏ.

பரவிய செய்தி
அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ரூப்ஜோதி தனது முதுகில் உணவு மூட்டைகளை தூக்கிச் செல்லும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது .
மதிப்பீடு
சுருக்கம்
மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒரு சில தலைவர்கள் நாட்டில் இன்னும் இருக்கின்றார்கள் …
விளக்கம்
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது . பிரம்மப்புத்திரா போன்ற முக்கிய நதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் வசிக்கும் ஆயிரக்கணக்கான பகுதிகள் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது . போக்குவரத்து , மின்சாரம் போன்றவை துண்டிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர் . மக்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு தேவையான உணவு , நிவாரண பொருள்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகமும் , சமூக அமைப்புகளும் வழங்கினர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை தன் முதுகில் தூக்கி சென்று உதவி செய்துள்ளார் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் ரூப்ஜோதி குர்மி . அவர் உதவி செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றது . இதனால் அவருக்கு பலர் பாராட்டுகளையும் , நன்றிகளையும் தெரிவித்தனர்.
இது குறித்து அவர் கூறுகையில் , நான் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவன் அல்ல , நானும் சாதாரண மனிதன் தான் . நான் ஒரு எம்எல்ஏ வாக இருக்கலாம் . ஆனால், நான் அவர்களில் ஒருவன் . அவர்களுக்கு உதவி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி என்றார் . ரூப்ஜோதி குர்மி மரியானி தொகுதியின் எம்எல்ஏ ஆவார் . இவரின் தயார் ரூபம் குர்மி இந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தவர் . அவர்களின் மறைவுக்கு பிறகு இதே தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது .
மக்களை பற்றி கவலை கொள்ளாத தலைவர்கள் இருக்கும் இதே தேசத்தில் தான் இது போன்ற உண்மையான தலைவனும் உள்ளார்கள் ..