This article is from Nov 11, 2017

ஹனுமனின் கதாயுதம் இலங்கையில் தோண்டி எடுக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

சமீபத்தில் இலங்கையில் தோண்டி எடுக்கப்பட்ட ஹனுமனின் கதாயுதம் . புராணத்தில் கூறப்பட்டது உண்மையா …..

மதிப்பீடு

விளக்கம்

இராமாயணத்தில் வரும் ஹனுமானின் கதாயுதம் சமீபத்தில் இலங்கையில் தோண்டி எடுக்கப்பட்டது. அளவில் பெரிதாக இருக்கும் ஹனுமானின் கதாயுதம்கிடைத்ததை அடுத்து புராணத்தில் கூறிய கதைகள் அனைத்தும் உண்மையானவை என்று சமூக வலைதளங்களில் செய்திகளும், படங்களும் அதிகளவில் பகிரப்படுகின்றன.

கடவுளின் பெயரை சொல்லி அதிகமான வதந்திகள் பரப்பப்படுகின்றன . அது முற்றிலும் தவறான செய்தியாகும் . படத்தில் இருந்த மிகப்பெரிய கதாயுதம் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இந்தூர் பகுதியில் நந்தா நகர் ஹனுமன் ஆலயத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது ஆகும் .

21 டன் எடையும் மற்றும் 45 அடி உயரமும் கொண்ட இந்த கதாயுதம் 125 உயரம் உடைய ஹனுமன் சிலைக்கு 25 ஏப்ரல் 2013 ஆம் ஆண்டு ஹனுமன் ஜெயந்திக்கு நிறுவப்பட்டது என்று கூறப்படுகின்றது. இது தொடர்பான வீடியோ பதிவுகளை வலைதளங்களில் பார்க்கலாம் .

ஒவ்வொரு கோவிலுக்கும் தனி அடையாளத்தையும் , சிறப்பையும் எற்படுத்த இவ்வகையான காரியங்களை செய்வது வழக்கமான ஒன்றாகும் . அதை திரித்து நம் நாட்டில் பல வதந்திகள் பரவுகின்றன .

புராண கதைகளை மெய்யாக்க ஒரு சிலர் தவறான வதந்திகளை பரப்பத்தான் செய்வார்கள் , மக்கள் மனதில் உள்ள கடவுள் நம்பிக்கையை சிலர் தவறாக பயன்படுத்தாமல் இருக்க நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader