ஹிட்லர் மற்றும் ஒசாமா பின்லேடனுக்கு நோபல் பரிசா ?

பரவிய செய்தி
ஹிட்லர் மற்றும் ஒசாமா பின்லேடன் இவர்களின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கபட்டது என்று கூறப்படுகிறது.
மதிப்பீடு
சுருக்கம்
1939 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக அடோல்ப் ஹிட்லரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது
விளக்கம்
அடோல்ப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபர் ஆவார் . ஸ்வீடிஷ் பார்லிமென்ட்டின் காரியஸ்தர் மற்றும் சமூக ஜனநாயகவாதி ஆன erik brandt அவர்கள் ஹிட்லரின் பெயரை பரிந்துரை செய்தார் .அவர் கூறிய காரணம் என்னவென்றால் ஹிட்லர் அந்நாட்டின் பலகோடி மக்களின் நம்பிக்கையும் ,அன்பையும் பெற்றவர் .
மேலும் செப்டம்பர் மாதம் 1938 ஆம் ஆண்டு நடக்க இருந்த ஐரோப்பிய போரை நிறுத்தி மக்களை காப்பாற்றி ஒப்பில்லாத தலைவராக இருந்தவர் என்று கூறியிருந்தார். இவ்வாறு மக்களை போரில் இருந்த காப்பாற்றிய தலைவரை கௌரவிக்க அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். எனினும், ஹிட்லரின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டது.
ஹிட்லரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது உண்மை என்றாலும், ஒசாமாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது என்றுக் கூறுவது பொய்யாகும். நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் ஒசாமா பின்லேடன் பெயர் இதுவரை இடம்பெறவில்லை.
ஏன் என்று கேட்டால் அவரை தீவிரவாதி என்று அனைவரும் கூறுவர். நாம் ஒரு மாற்று கருத்தை கூறினால் நம்மை வேறு கோணத்தில் பார்பர் . அதனால் நாங்கள் இதுவரை கூறிய உண்மையே போதுமானது . நீ மேற்கொண்ட புரட்சியில் வெற்றி பெற்றால் போராளியாகவும் , வீழ்ச்சியுற்றால் தீவிரவாதியாகவும் பார்க்கப்படுவாய் .